search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court disqualification case"

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து மத்திய அரசு பெண் வக்கீல் ரேணுகாவுக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    கோவை:

    கோவை கோர்ட்டு வளாகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை கோர்ட்டு உள்ளது. இங்கு நீதிபதியாக பணியாற்றி வருபவர் சஞ்சய்பாபா. ஹெராயின் போதை பொருள் கடத்தல் தொடர்பாக இந்த கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய அரசு வக்கீல் ரேணுகா ஆஜராகி வாதாடி வருகிறார். தான் கோர்ட்டில் ஆஜராகாதபோது, வழக்கில் சாட்சிகள் விசாரணை நடைபெற்றதற்கு ரேணுகா எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் அவர், நீதிபதியின் அறைக்கு சென்று தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வக்கீல் ரேணுகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி பதிவு செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் வக்கீல் ரேணுகா இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வக்கீல் ரேணுகாவுக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார். #tamilnews
    ×