என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cowherd"
- ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளை மாடுகள் பங்கேற்றன.
- போட்டியில் 4 பிரிவுகளில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களம் இறக்க பட்டு வீரர்கள் மாட்டை அடக்கினர்.
விளாத்திகுளம்:
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது கட்டு திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளை மாடுகள் பங்கேற்றன.
இக்கிராமத்தில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த பாரம்பரிய திருவிழாவானது, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு புகழ்பெற்ற எருது கட்டு திருவிழா வெகு விமர்சியாக தொடங்கியது. 24 மாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் 4 பிரிவுகளில் ஒவ்வொரு சுற்றுக்கும் 40 வீரர்கள் களம் இறக்க பட்டு வீரர்கள் மாட்டை அடக்கினர்.
முன்னதாக வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னரே ஆடுகளத்தில் இறக்கினர். இந்த எருது விடும் விழாவை காண வெளியூர்களில் இருந்து வந்த பொதுமக்கள், பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்.