search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPL 2023"

    • சாத்விக் வால்டன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 பந்தில் 80 ரன்கள் குவித்தார்
    • 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்

    கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1, இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஒவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சாய்ம் ஆயுப் 39 பந்தில் 49 ரன்களும், விக்கெட் கீப்பர் அசாம் கான் 27 பந்தில் 36 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர் சாத்விக் வால்டன் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 57 பந்தில் 80 ரன்கள் விளாச, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    நாளை மறுநாள் (22-ந்தேதி) இந்திய நேரப்படி 23-ந்தேி அதிகாலை 4.30 மணிக்கு ஜமைக்கா தல்லாவாஸ்- கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிபையர்-2 போட்டி நடைபெற இருக்கிறது. எலிமினேட்டரில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியை செயின்ட் லூசியாக கிங்ஸ் வீழ்த்தியிருந்தது.

    • அதிரடியாக விளையாடி சதம் அடித்த சாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    • சிபிஎல் தொடரில் தம்முடைய முதல் சதத்தை ஹோப் (41 பந்துகளில்) பதிவு செய்தார்.

    வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்பிடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பார்பர்டாஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்கின.

    முதலில் பேட்டிங் செய்த கயனா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சாய் கோப் 106 ரன்கள் குவித்தார். 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பார்பர்டாஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.


    இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த சாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு கட்டத்தில் 53 பந்தில் 69 ரன்கள் எடுத்திருந்த அவர் 16-வது ஓவரில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சிபிஎல் தொடரில் தம்முடைய முதல் சதத்தை ஹோப் (41 பந்துகளில்) பதிவு செய்தார்.

    மேலும் சிபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்து 2-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். முதலிடத்தில் ஆண்ட்ரே ரசல் 2018-ல் 40 பந்துகளில் ட்ரினிடாட் அணிக்கு எதிராக 100 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். 

    ×