என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cremation ground"
- இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
- இறந்த இளம்பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு.
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை தின்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயூர்பஞ்ச் மாவட்டம் தந்துனி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மோகன் சிங் (58) மற்றும் நரேந்திர சிங் (25) ஆகியோர் குடிபோதையில் சுடுகாட்டிற்கு சென்று அங்கு தகன மேடையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலின் சதையை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை காலை பிஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இறந்த 25 வயதான மதுஸ்மிதா சிங் என்ற இளம்பெண்ணின் உடல் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்ட சில நிமிடங்களில் நரேந்திர சிங் மற்றும் மோகன் சிங் சடலத்தை பீய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இவர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த படாசாஹி போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர், இறந்த இளம்பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இருவரிடமும் போலீசார் விசாரித்ததில், திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொள்வது தங்களுக்கு சக்தியைத் தரும் என்றும் அதனால் சடலத்தை சாப்பிட்டதாகவும் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் கூறினர். போதையில் இருவரும் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.