என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » criminals arrest
நீங்கள் தேடியது "criminals arrest"
அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகளை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
அபுதாபியில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்தது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தனர். அனைவருடைய பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்த சோதனையில் அபுதாபி விமானத்தில் சென்னை திரும்பிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அவர்களில் ஒருவர் தஞ்சை மாவட்டம், அம்மா வட்டம், அம்மா பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (32). இவர் கொலை வழக்கு குற்றவாளி. 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து இருந்தார்.
மற்றொருவர் பெயர் சேக் முகமது (32). தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர். இவர் அடிதடி வழக்கில் தலைமறைவானவர் என்ற தகவலை போலீசார் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து 2 பேரையும் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து தஞ்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

×

X