search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crowds of people gathered"

    • தீபாவளிக்கு ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களை இருப்பதால் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறா ர்கள். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக மக்கள் தீபாவ ளியை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தீபாவளிக்கு ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக ஈரோடு மணிக்கூண்டு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை சாலையின் இரு புறமும் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இதேப்போல ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. ரோடு வீதிகளில் ஏரா ளமான ஜவுளிக்கடைகள், நகை கடைகள் உள்ளன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கடந்த சில நாட்களாக ஜவுளி வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது. ஜவுளிக் கடைகளில் மக்கள் போட்டி கொண்டு துணிகளை வாங்கி சென்றனர்.

    இதேபோல் ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளி விலை குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிக மாகவே காணப்பட்டது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதால் போலீஸ் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

    மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம் உள்பட மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் போலீஸ் சார்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கண்காணிப்பு கோபுரங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்ப ட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நடவடி க்கைக்களை துல்லியமாக கண்காணிக்க முடியும். இதேபோல் இன்று நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    ×