என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cubic Feet Rise"
- கல்லணை கால்வாயில் இருபுறமும் கரைகளை தொட்டபடி ஆர்ப்பரித்துக் கொண்டு காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் கால்வாய் நீருடன் மழை நீரும் சேர்ந்து ஓடுகிறது.
தஞ்சாவூர்:
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகள் நிரம்பி உள்ளன.
இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1 லட்சத்து 51 ஆயிரத்து 893 கன அடியாக அதிகரித்தது.
இது நேற்றைய விட அதிகமாகும்.
இதையத்து கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 4812 கன அடி, வெண்ணாற்றில் 3010 கன அடி, கல்லணை கால்வாயில் 2017 கன அடி, கொள்ளிடத்தில் 52105 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக கல்லணை கால்வாயில் இருபுறமும் கரைகளை தொட்டபடி ஆர்ப்பரித்துக் கொண்டு காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தஞ்சையில் கல்லணை கால்வாயில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இன்று தஞ்சையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கல்லணை கால்வாயில் காவிரி நீருடன் மழை நீரும் சேர்ந்து ஓடுகிறது.