என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "culprits"
- மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
- ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 3 பேர் கைது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்படைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை மேற்கு வங்கத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.
முன்னதாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கான தளவாடங்களை சப்ளை செய்த முஸாமில் ஷெரீஜப் என்பவர், கடந்த மார்ச் 27ம் தேதி் கைது செய்யப்பட்டார்.
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ இதுவரை 3 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
- குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி பாராட்டு தெரிவித்தார்.
- தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உதவி நிலைய டாக்டர் மனோஜ் குமாரின் கிளினிக் மற்றும் வீடு உள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான இவர் தனக்கு சொந்தமான 2 கார்களை கிளினிக் அருகில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்று விட்டார்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி வந்து டாக்டர் மனோஜ்குமாரின் காருக்கு தீ வைத்து விட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அனைவரும் வந்து தீயை அனைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரையை சேர்ந்த சீனி முகம்மது மகன் அப்துல் ஹக்கீம் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் இப்ராகிம் , அப்துல் அஜிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த ராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சித்திரவேல் உள்பட 10 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1. லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கி பாராட்டினார்.
அப்போது தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் இங்கு தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக அதிக அளவில் வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
சுருளி அருவி பகுதியில் உள்ள பூதநாராயணன் கோவிலில் கடந்த 3-ந் தேதி புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கொள்ளையடிக்க முயன்றனர். இதை தடுத்த பூசாரி மலையன் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு பூசாரி பாலசுப்பிரமணி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சுற்றுவட்டார கிராமங்களான சுருளிப்பட்டி, கருநாக்கன்முத்தன்பட்டி, எரசை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக விசாரித்த போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
கோவிலில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்த பக்கமும் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சேகரித்த பதிவுகள் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒத்துப்போகவில்லை.
இதனால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. சுருளி அருவி முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிப்டு முறையில் போலீசார் சுற்றி வருகின்றனர். சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் பூசாரி கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா மற்றும் கோவிலுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அருவி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நீரூபிக்கப்பட்டு அவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்