என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cute babies"
- "கொழு கொழு குழந்தை போட்டி" சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. அதில் 56 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
- சாரல் திருவிழாவில் இன்று விளையாட்டு துறை சார்பில் பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, யோகா போட்டி ஆகியவை நடைபெற்றது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பொதிகை மலை சாரலில் மாவட்ட கலெக்டரின் முயற்சியால் சாரல் திருவிழா 2022 குற்றாலத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
கொழு கொழு குழந்தை போட்டி
நிகழ்வின் ஒரு வண்ணமாக ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நேற்று "கொழு கொழு குழந்தை போட்டி" சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. அதில் 56 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
அவர்களின் எடை, உயரம் மற்றும் இயக்க தசை செயல்பாடுகள் மூலம் முதல் மூன்று குழந்தைகளை மாவட்ட திட்ட அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், நடுவர்களாக மருத்துவ அலுவலர் சரவணன் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், கடையநல்லூர் பர்கத் சுல்தானா ஆகியோரால் ஒருங்கிணைத்து தேர்வு செய்யபட்டது.
இதில் கீழப்பாவூர் வட்டாரத்திற்குட்பட்ட மணிராஜ், முருகலட்சுமி தம்பதியினரின் குழந்தை சிவாத்மிகாதங்கம் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், கடையநல்லூர் வட்டாரத்திற்குட்பட்ட சாமிதுறை-இசக்கியம்மாள் தம்பதியினரின் குழந்தை கோகுல் இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரமும், செங்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட சார்புதீன்-நஸ்ரின் பாத்திமா தம்பதியினரின் குழந்தை ஆபிக் அகமது மூன்றாம் பரிசு ரூ.2,500 பெற்றனர்.
இன்றைய நிகழ்ச்சிகள்
சாரல் திருவிழாவில் இன்று விளையாட்டு துறை சார்பில் பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, யோகா போட்டி ஆகியவை நடைபெற்றது.
மாலையில் மதுரை பனையூர் ராஜா குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியும், நெல்லை ஸ்ரீராம் நாட்டியாலயா வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி, சென்னை பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி,காவல்துறை இசை மேள அணிவகுப்பு, கேரள மாநில கலைஞர்களின் நிகழ்ச்சி, சங்கரன்கோவில் ஆனந்தராஜ் குழுவினரின் ஓயிலாட்டம், கலைமாமணி ஜெயக்குமார் வழங்கும் சாக்சபோன் நிகழ்ச்சி,திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகர் கானா பாலா கலந்துகொள்ளும் நெல்லை வானவில் திரை இசைக்குழு வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்