என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Daily"
- சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தினசரி சந்தையில் நேரடி வசூல் செய்யப்படுகிறது.
- தினசரி காய்கறி சந்தை, கடை வியாபாரிகளிடம் வரி வசூல் செய்யப்படுகிறது.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தினசரி காய்கறி வாரச்சந்தை செயல்படுகிறது. இதனை தண்டல் வசூல் செய்ய வெளிநபருக்கு டெண்டர் மூலம் உரிமம் விடப்பட்டது. கடந்த 6-ந்தேயுடன் முடிவுற்ற நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) முதல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினசரி காய்கறி சந்தை, கடை வியாபாரிகளிடம் வரி வசூல் செய்யப்படுகிறது.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் முன்னிலையில் சந்தை வியாபாரிகளிடம் இனி வரும் காலத்திற்கு டெண்டர் ஏலம் விடும்வரை நிர்வாகமே நேரடியாக வரி வசூல் செய்யும் என அறிவிக்க படுகிறது என தெரிவித்தார். தற்போது திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், பேரூராட்சி பகுதிகளை சுகாதாரத்துடன் பராமரிப்பு, துப்புரவு பணிகள் மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அப்போது சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், கணக்கர் கல்யாணசுந்தரம், கண்ணம்மா, சந்தோஷ், வினோத், அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.