என் மலர்
நீங்கள் தேடியது "dam"
- செண்பகாதேவி அருவியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருபுறமும் மலை முகட்டுக்கிடையில் இடமானது பறந்து விரிந்து காணப்படுகிறது.
- அருவியில் தண்ணீர் விழுகிற வகையிலும், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கால் உயிர் சேதம் ஏற்படாத வண்ணமும் ஏற்பாடு செய்யலாம்.
தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவிக்கு மேலே செண்பகாதேவி அருவியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருபுறமும் மலை முகட்டுக்கிடையில் இடமானது பறந்து விரிந்து காணப்படுகிறது.
அந்த பகுதியில் புதிதாக அணை கட்டி ஆண்டு முழுவதும் குற்றால அருவியில் தண்ணீர் விழுகிற வகையிலும், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கால் உயிர் சேதம் ஏற்படாத வண்ணமும் ஏற்பாடு செய்யலாம். இதற்கு பொதுப்பணித்துறை மூலம் அணை கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.
அணை கட்ட திட்டம் நிறைவேறுகிற போது வனத்துறை அனுமதி அவசியம் என்பதனால் அணை கட்டும் பட்சத்தில் அனுமதி வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் அவர் தனது கோரிக்கை மனுவினை வழங்கினார்.
- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முற்றிலும் மழை நின்று கடும் வெயில் அடித்து வந்தது.
- நெல்லை, தென்காசி மாவட்டத்தின் அணை பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது.
நெல்லை:
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தாலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் போதிய அளவில் பெய்யாமல் உள்ளது.
தொடக்கத்தில் பரவலாக பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக முற்றிலும் மழை நின்று கடும் வெயில் அடித்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. நெல்லை, தென்காசி மாவட்டத்தின் அணை பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்தது.
அதிகபட்சமாக திருச்செந்தூர், குலசேக ரன்பட்டி னத்தில் 7 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இதேபோல் சாத்தான்குளம், தூத்துக்குடி, தென்காசி, கடனாநதி, கருப்பாநதி, பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
நெல்லை, டவுன், சந்திப்பு, பாளை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணையின் இன்றைய நீர்மட்டம் 94.55 அடியாக உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100.36 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.86 அடியாகவும் உள்ளது.
- நந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- குறைதீர் கூட்டம்
அரியலூர்:அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள நத்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.ச.கலைவாணி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள்:அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும்போது, அதிக விலைக்கு உரம் விற்கப்பட்டு வரும் தனியார் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியில் மாமூல் பெறும் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் பேசும் போது, தூத்தூர் - வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கை கதவணையுடன் கூடிய தடுப்பணை, பாலம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே பொய்யூர் பகுதியில் தடுப்பனைக் கட்டுவதை கால தாமதம் இல்லாமல் கட்டி முடிக்க வேண்டும்.ராயம்பரம், நக்கம்பாடி ஆகிய ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுக்கிரன் ஏரியில் காவிரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் குறுக்கே சுண்டக்குடிக்கு கிழக்கேவைப்பூருக்கு வரை அடந்துள்ள வேலிகருவ முள்செடிகளை அகற்றி மருதையாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மானியத்தில முந்திரி கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செந்துறை தாலுக்கா விவசாயிகளுக்கு உளுந்துக்கான காப்பீடு தொகை மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையினை பெற்று தரவேண்டும் என்றார்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி,அவைகைளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்:
காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.நேற்று 2,746 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,642 கன அடியாக குறைந்தது. காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக, அந்த தண்ணீர் முழுதும் அப்படியே திறந்துவிடப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.அமராவதி அணையில் இருந்து ஆற்றில் காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 300 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 440, கன அடியும் தண்ணீர் திறக்கப் பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 67.79 அடியாக இருந்தது. அணைக்கு, வினாடிக்கு, 29 கன அடி தண்ணீர் வந்தது.க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா ளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 15.38 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆண்டு தோறும் கார், பிசானம், பூ மகசூல் என 3 போகம் நெல் விளையும்.
- கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் தற்போது வாட்டி வதைத்து வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆண்டு தோறும் கார், பிசானம், பூ மகசூல் என 3 போகம் நெல் விளையும்.
பிரதான அணை
இதில் நெல் சாகுபடிக்கு நெல்லை மாவட்ட விவசாயிகள் நம்பி இருக்கும் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் குறைந்த பட்சம் 60 அடி தண்ணீர் இருந்தாலே விவசாயத்திற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்ணீர் திறக்கப்படும்.
இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமிரபரணி ஆறு வழியாக பாசனத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இது தவிர 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மூல மாகவும் விவசாயம் நடை பெறும். அணை கொள்ளளவு 100 அடியை எட்டும் போது சுழற்சி அடிப்படையில் ரீச்சுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயம் நடைபெறும். இதை தவிர இந்த தண்ணீர் மூலமாக மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழை அளவு வெகுவாக குறைந்து விட்டது.
குளங்கள் வறண்டன
கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட அணைகளில் 62.10 சதவீதம் நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போதைய நிலவரப்படி 29.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த மாதம் இயல்பான மழை அளவை விட 48.32 சதவீதம் குறைவாக மழை பெய்து உள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான குளங்கள் வறண்டு விட்டன. கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் தற்போது வாட்டி வதைத்து வருகிறது.இதனால் அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது.
பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் சராசரியாக தினந்தோறும் 1½ அடி முதல் 3 அடி வரை குறைந்து வருகிறது.
தென்காசி
இன்றைய நிலவரப்படி அணையில் 54.70 அடி நீர் இருப்பு உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் 16.75 அடியும், 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் 16.25 அடி நீரும் மட்டுமே இருப்பில் உள்ளது.
இதே போல் தென்காசி மாவட்டத்தில் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார் அணைக்கட்டுகள் மூலமாக விவசாயம் நடந்து வருகிறது.
இந்நிலையில் அங்கும் அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மாவட்டத்தின் மிக பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை வறண்டு விட்டது.
கருப்பாநதி அணையும் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடனா மற்றும் ராமநதி அணைகளில் நீர் இருப்பு பாதியாக குறைந்து உள்ளது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- 250 கன அடி 100 அடியாக குறைக்கப்பட்டது
- நீர்மட்டம் 54.04அடியாக உள்ளது
கரூர்,
உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட 250 கன அடி தண்ணீர் வினாடிக்கு 100 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 54.04 அடியாக உள்ளது. காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு 684 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 689 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுதும் காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையின் நீர்மட்டம் 14.72 அடியாக உள்ளது.
- 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுகிறது.
- 10 கி.மீ தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொண்டல் தலைப்பி–லிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல் திருநகரி, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுலைவாசலில் கடலில் கலந்து வருகிறது. இந்த உப்பனாறு மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது.
இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது.
இதனால் சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க அப்பகுதி மக்கள் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி நிதியுதவியுடன் தற்காலிகமாக மண் அணை அமைத்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் பெய்த மழை நீரால் நிலத்தடி நீர் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடைக்காலம் துவங்க உள்ளதால் கடல் நீர் உட்புகுந்து வருவதை தடுக்க மண் அணையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் பனமங்கலம், துறையூர், கோடங்குடி, குமாரநத்தம், வரவுக்குடி, ஆதமங்கலம், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்–படுவதாக அப்பகுதி கிராம மக்கள், விவ–சாயிகள் தெரிவிக்கின்றனர்.
பனமங்கலம் பகுதியில் அரசு நிரந்தரமாக தடுப்பணை அமைக்க வேண்டும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைத்திட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
- பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.
வாழப்பாடி:
கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.
கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர். அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.
கடந்தாண்டு இறுாதியில் பெய்த பருவமழையால் அணையில், 49.98 அடி உயரத்தில் 171 மில்லியன கன அடி தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு மற்றும் ஆறு மற்றும் ஏரிப் பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, கரியக்கோயில் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து மார்ச் மாதத்தில் 24 நாட்களுக்கு தலைமை மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் கரியக்கோயில் ஆற்றிலும், புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்காக அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு சுழற்சி முறையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாயக்கிழமை நிலவரப்படி 27.52 அடியாக சரிந்து போனது. தற்போது அணையில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது. கோடை தொடங்கிய நிலையிலேயே அணையின் நீர்மட்டம் சரிந்து போனதால், எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறட்சியை சமாளிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
- வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் நீர் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது.
- மர்மநபர்கள் நீரை திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது.
கடலூர்:
வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டத்தை இணை க்கும் தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.16 கோடியில் கட்ட ப்பட்டது. இந்த தடுப்பணை யால் 4.14 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்க முடியும் இந்த தடுப்பணைக்கு கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை நீர் மற்றும் அருகில் இருந்து ஓடை வழியாக தடுப்பணைக்கு வந்து முழு கொள்ளளவை எட்டியயது. கூடலூர் கிராம மக்கள் குருவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தனர்.
இந்நிலையில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தடுப்பணையின் கதவுகளை திறந்து விடுவதும் அதை சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் மூடுவதும் தொடர் கதையாக உள்ளது.திறந்து விடுவதால் சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக ஆற்றில் வெளியேறி கடலில் கலக்கிறது இதனால் விவசாயிகளுக்கு பாசன நீர் தற்போது கேள்விக் குறியாக மாறி வருகிறது.5 அடிக்கு மேல் தேங்கியி ருந்த நீர் நிலையில் தற்போது 3 அடி யாக குறைந்துள்ளதால் விவசா யிகள் வேதனை யடைந்துள்ளனர். தடுப்பணை யில் இருந்து தண்ணீரை திறந்து விடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளில் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
- அபராத தொகையை 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராய்ப்பூர் :
சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறிவிழுந்த தனது செல்போனை மீட்க ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவுப்பொருள் ஆய்வாளர் அணை நீரை 'காலி' செய்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அதிகாரி ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அவருக்கு வாய்மொழியாக அனுமதி அளித்த நீர்வளத்துறை அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் சத்தீஷ்கர் நீர்வளத்துறை சார்பில் அதிகாரி ராஜேசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உரிய அனுமதி பெறாமல் டீசல் மோட்டார்களை பயன்படுத்தி 4 ஆயிரத்து 104 கனஅடி நீரை நீங்கள் வீணாக்கியுள்ளீர்கள். இது சட்டவிரோத செயலாகும்.
இதற்காக ஒரு கனஅடி நீருக்கு ரூ.10.50 வீதம் மொத்தமாக ரூ.43 ஆயிரத்து 92-ஐ செலுத்த வேண்டும். அத்துடன் அனுமதியின்றி நீரை வெளியேற்றியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டையும் சேர்த்து மொத்தமாக ரூ.53 ஆயிரத்து 92-ஐ 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
- மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிற்றுடன், நெற்றியில் நாமமிட்டு, கையில் நாணலுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
- மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பகுதியிலும், காவிரி பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் நீராடினர்.
- மேட்டூர் அணை பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 11,295 பேர் வந்து சென்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோடை விடுமுறை முடிய 2 நாட்களே உள்ளதால் நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு நேற்று சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உட்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
காவிரி ஆற்றில் வெகு நேரம் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், பின்னர் பூங்காவில் பொழுதை கழித்தனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர்.
சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் உணவு அருந்தியும் ஓய்வு எடுத்தும் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சாலையோர கடைகளில் அதிக விற்பனை காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை மீன்களை வாங்கி சமைத்து சுவைத்தனர். இதனால் மீன் வியாபாரம் களை கட்டியது.
பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் வந்திருந்ததால் மேட்டூர் - கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய் பகுதியிலும், காவிரி பாலம் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் நீராடினர்.
மேட்டூர் அணை பூங்காவுக்கு நேற்று ஒரே நாளில் 11,295 பேர் வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டண மாக 56 ஆயிரத்து 475 வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 886 பேர் வந்து சென்றனர்.