search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dam side"

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் பெரும்பா லான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • நேற்று மாலை மாநகர பகுதிகளான பழைய பேட்டை, டவுன், வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலைய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் பெரும்பா லான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை

    இந்நிலையில் நேற்று மாலை மாநகர பகுதிகளான பழைய பேட்டை, டவுன், வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலைய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லையில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தை பொறுத்தவரை சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. அங்கு 20 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. அம்பையில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது.

    முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பலத்த மழை பெய்தது. சேரன்மகாதேவி யில் 4.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக மழை பெய்ய வில்லை. பாபநாசம் அணைக்கு சுமார் 700 கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை நீர்மட்டம் 90 அடியை கடந்து விட்டது.

    மழை இல்லாததால் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது. சேர்வலாறு அணை 84 அடியாக குறைந்தது. தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத் தில் கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. வானம் பார்த்த பூமியான கழுகுமலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு தாழ்வான இடங்க ளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. கயத்தாறு மற்றும் கடம்பூரிலும் நேற்று மாலையில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு, பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்ச மாக கடம்பூரில் 16 மில்லிமீட்டரும், கயத்தாறில் 5.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    ×