என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DCW Company"
- நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
ஆறுமுகநேரி:
சாகுபுரம் டி.சி. டபிள்யூ தொழிற்சாலை வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பங்கேற்று மரக்க ன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் சிறப்புரையாற்றிய போது, பிளாஸ்டிக் பொருள்களின் மறு பயன்பாடு மற்றும் மறுசுழ ற்சிக்கான வழிமுறை களை பற்றி பேசினார். மூத்த பொது மேலாளர் கேசவன், வீடுகள் மற்றும் ஆலைகளில் தண்ணீர் சிக்கனம், அவற்றை முறையாக பயன்படுத்துவது குறித்தும், துணை பொது மேலாளர் ரவிக்குமார் சுற்றுச்சூழல் தினத்தின் அவசியம் பற்றியும் பேசினர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் நிறுவ னத்தின் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டி.சி. டபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறையினர், சிவில் துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் செய்திருந்தனர்.