search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "De bruyn"

    • தென் ஆப்பிரிக்க வீரர் தனது மனைவியின் முதல் பிரசவத்துக்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.
    • சிட்னி டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக வான் டெர் டசன் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்றிச் கிளாசன் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் டி பிரைன் தனது மனைவியின் முதல் பிரசவத்துக்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.

    இதையடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியில் டி பிரைனுக்கு பதிலாக வான் டெர் டசன் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்றிச் கிளாசன் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்து 25 வருட சாதனையை சமன் செய்துள்ளார் டி ப்ரூயின். #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் களம் இறங்கிய இலங்கை 338 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் இலங்கை 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை. கடினமாக இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா விரைவாக 5 விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு டி ப்ரூயின் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார்.



    இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பவுமா 63 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் டி ப்ரூயின் சிறப்பாக விளையாடி 101 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஆசியக் கண்டத்தில் 4-வது இன்னிங்சில் சதம் அடித்த 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் ஒரு டெஸ்டின் கடைசி இன்னிங்சில், அதாவது நான்காவது இன்னிங்சில் 1993-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன்பின் தற்போது 28 வருடத்திற்குப் பிறகு ப்ரூயின் சதம் அடித்துள்ளார். 2004-ல் ஸ்மித் 74 ரன்களும், தற்போது பவுமா 63 ரன்களும் அடித்துள்ளனர்.
    ×