என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "deletion"
- மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
- அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-ஐதராபாத் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 201 பேர் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர்.
4 லட்சத்து 39 ஆயிரத்து 801 பேர் வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து உள்ளனர். 54 ஆயிரத்து 259 பேர் போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி இந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் உள்ளதால் வாக்கு சதவீதம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட அனைவரின் வாக்குகளும் ஒரே வாக்குச்சாவடியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
1 லட்சத்து 81 ஆயிரத்து 405 பேரின் வீட்டு முகவரிகள் தவறாக இருந்தது. அவைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- திருவாரூரில் நாளை பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற உள்ளது.
- இதில் பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோகத் திட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
திருவாரூர் தாலுகா தீபங்குடி கிராமத்தில் திருவாரூர் வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா வேலங்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், குடவாசல் தாலுகா கூந்தலூர் கிராமத்தில் திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா புலவர் நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையில் நடக்கிறது.
மேலும் நீடாமங்கலம் தாலுகா பத்தூர் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைபதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி நல்லூர் கிராமத்தில் மன்னார்குடி வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா பழையங்குடி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா பாலகுறிச்சி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது.
எனவே, அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.
அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்த கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் மனு அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
- மேம்பாட்டு ஆணைய செயலாளர் நடவடிக்கை
பெரம்பலூர்:
விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டா்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் கல்யாணி, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியை சந்தித்து நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி உள் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் தற்காப்பு பயிற்சி (டேக்வாண்டோ) அளித்துவரும் பயிற்றுனர் தர்மராஜன் என்பவர் மதுபோதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷிடம் புகார் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பயிற்றுனர் மற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய சுரேஷை கைது செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில், விளையாட்டு விடுதி மாணவிகள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்