என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dengue prevention work"
- நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப நெல்லை மாநகராட்சியில் சாக்கடை வாறுகால்கள் தூர்வாரி கொசு உற்பத்தியாகாமல் தடுப்பது, சாலைகளை பெருக்கி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி சுகா தாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரில் இன்று டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து சொக்கப்பனை முக்கு செல்லும் சாலையில் உள்ள சாக்கடை வாறுகால் தூர்வாரும் பணி கவுன்சிலர் கிட்டு முன்னிலையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இன்று நடைபெற்றது. தொ டர்ந்து நயினார் குளம் மார்க்கெட்டில் இருந்து டவுன் ஆர்ச் வரை சாலை பெருக்கி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பின்னர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தெரு க்களில் இருபுறமும் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
முன்னதாக டவுன் கல்லணை மகளிர் பள்ளியில் மாணவிகளிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பேட்டையில் உள்ள சரக்கு முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர் கிட்டு முன்னிலையில் தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- நீர்தேங்கும் வகையில் உள்ள இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து வார்டுகளிலும் நீர்தேங்கும் இடங்கள் ஆராயப்பட்டு கொசுக்கள் முட்டையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வீடுகளிலும் உள்ள தண்ணீர் ெதாட்டிகள், நீர்தேங்கும் வகையில் உள்ள இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொசுமருந்து அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக மீனாட்சிபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்