search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "denkanikottai"

    தேன்கனிக்கோட்டை பகுதியி சந்தேகத்தின் பேரில் எவரேனும் காணப்பட்டால் அவர்களை தாக்க வேண்டாம், காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் கூறி உள்ளார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து கத்தி, கடப்பாறை, அரிவாள் போன்ற பொருட்கள் விற்பனை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

    பொதுவாக அனைத்து தொழிலாளர்களும் இந்தி மொழி தவிர மற்ற மொழி தெரியாதவர்கள் ஆவார்கள். முதலாவதாக அவர்களுக்கு மொழிப்பிரச்சனை உள்ளது.

    தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்தி மொழி தெரியாததால் பிழைப்பை நடத்தி வரும் வடமாநில வாலிபர்களை மூர்க்கத்தனமாக தாக்குகின்றனர். வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரவவிட்டு அவர்களை அடிப்பதும், காவல் நிலையத்தில் ஒப்படைப்பதும் அன்றாடம் தொடர்ச்சியான சம்பவமாக நடந்து வருகிறது.

    வீண் வதந்தியால் உறவினர்கள் வீட்டுக்கு வரும் அண்டை மாநிலத்தவரும் தாக்கப்படுகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேறு மாவட்டத்தில் இருந்து உறவினர்களை பார்க்க தேன்கனிக்கோட்டைக்கு வந்த 2 பேர் பயங்கரமாக தாக்கப்பட்டு பின் தகுந்த அடையாள அட்டைகளை சமர்ப்பித்த பின் பொதுமக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

    நீண்ட விசாரணைக்கு பின்பு காவல் நிலையத்தில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சந்தேகத்தின் பேரில் எவரேனும் காணப்பட்டால் அவர்களை தாக்க வேண்டாம். காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். சந்தேகத்தின் பேரில் வீண் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×