என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "derail"
- மதுராவில் சரக்கு ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின.
- இதனால் டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் ரோடு என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் 15 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், நேற்று மாலை பீகாரின் நாராயண்பூரில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Uttar Pradesh: A goods train derailed in Mathura. Officers from the railway department along with the city police present at the spot. More details awaited. pic.twitter.com/jMuMRX3KUc
— ANI (@ANI) September 18, 2024
- உ.பி.யின் கோண்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
- இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
கொல்கத்தா:
உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா பகுதியில் இன்று மதியம் 2.35 மணிக்கு சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோண்டா ரெயில் விபத்து தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று நடந்த மற்றொரு சோகமான ரெயில் விபத்து குறித்து அறிந்து வருத்தமடைகிறேன்.
மற்றொரு ரெயில் தடம் புரண்டது. இந்த முறை சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ். ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்ன செய்கிறது இந்திய அரசு? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அரசுக்கு எப்போது புத்தி வரும்?!"
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. உதவிக்காக அரசாங்கம் ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. கோண்டா (8957400965) மற்றும் லக்னோ (8957409292).
காயமடைந்த பயணிகளின் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- உ.பி.யில் பயணிகள் ரெயில் இன்று திடீரென தடம் புரண்டது.
- இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | Visuals from Uttar Pradesh's Gonda, where coaches of the Dibrugarh-Chandigarh Express derailed. Rescue operation underway.
— ANI (@ANI) July 18, 2024
"One person has died in the incident, 7 injured " says Pankaj Singh, CPRO, North Eastern Railway pic.twitter.com/UyKlUsJFfx
- 9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
- விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல்.
ரஷியாவின் வடகிழக்கு பகுதியான கோமியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியான நோவோரோசிஸ்க் நகருக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
அதில் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இன்டா நகர் அருகே சென்றபோது ரெயில் தடம் புரண்டது.
9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இந்த விபத்தில் 70 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு இரண்டு மீட்பு ரெயில்களுடன் மீட்புப் படையினர் சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசர சேவை மற்றும் மருத்துவ குழுக்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழையே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
500-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரெயில் ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள சுரங்க நகரமான வோர்குடாவிலிருந்து நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
- அங்கு விரைந்த அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி பஹானாகா பஜார் நிலையத்தில் அடுத்தடுத்து 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 291 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்படோலாவில் இருந்து லஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்கு ரெயில் சிறப்பு வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது.
இந்த விபத்தில் உயிர் சேதம் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும், சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று ரெயில்வே அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தகவலறிந்து அங்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
- சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் சோடர்மா மற்றும் மன்பூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே இன்று காலை 6.45 மணிக்கு அந்த வழியாக நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது.
அந்த ரெயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. இதனால் ரெயில் பெட்டிகளில் இருந்த நிலக்கரிகள் தண்டவாளத்தில் சிதறி கிடக்கிறது.
இதுபற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டது. பல ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்