search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development schemes"

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லையில் இன்று நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வரவேற்றார்.

    கூடுதல் தலைமை செயலாளர் ( நகராட்சி நிர்வாகம்) சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கலெக்டர் விஷ்ணு, குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் தட்சணாமூர்த்தி, பேரூராட்சிகள் இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், கீதாஜீவன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் நடந்து வரும் திட்டப்பணிகள், நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் குடிநீர் திட்டப்பணிகள், குடிநீர் விநியோகம், மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நெல்லை வந்த அமைச்சர் நேருவிற்கு தி.மு.க.நிர்வாகிகள் ஆரோக்கிய எட்வின், ஜோசப் பெல்சி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர் மோடி 937 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். #PMmodi # #Rs937croredevelopmentschemes #Varanasidevelopmentschemes
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அசம்கர், தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    அசாம்கரில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றிய அவர் பின்னர் தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் 937 கோடி ரூபாய் மதிப்பிலான 33 நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:-

    ஜப்பான் பிரதமரை நான் சந்திக்கும் போதெல்லாம் வாரணாசி மக்களாகிய நீங்கள் அவருக்கு அளித்த மகத்தான வரவேற்பை பற்றி பிறரிடம் அவர் பெருமையுடன் குறிப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். பிரான்ஸ் அதிபரை நீங்கள் வரவேற்ற விதத்தை அந்நாட்டு மக்கள் போற்றி வருகின்றனர். இதுதான் வாரணாசியின் கலாசாரம், இதுதான் வாரணாசியின் அன்பு.

    முந்தைய ஆட்சி காலங்களில் வாரணாசியில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடக்கவில்லை. மேம்பாட்டு பணிகள் முடக்கப்பட்டிருந்தன. மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் எங்களை ஆதரித்து வாக்களித்த பின்னர், இந்த பகுதி வளர்ச்சிப் பாதையில் நடைபோட ஆரம்பித்தது.

    கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 200 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    புதிய இந்தியாவை படைப்பதற்காக புதிய வாரணாசி உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் ஆன்மா பண்டைக்காலத்து பெருமையுடனும், உடல் நவீனக்கால வசதிகளுடனும் ஜொலிக்கும். வாரணாசியின் அனைத்து மூலைகளிலும் கலாசாரமும், பாரம்பரியமும் செழித்திருக்கும். அதேவேளையில் நவீன காலத்துக்கேற்ற வசதிகள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMmodi # #Rs937croredevelopmentschemes  #Varanasidevelopmentschemes
    ×