search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees are not allowed"

    • அபிஷேகம் நடை பெறுவதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் கூறியதாக தெரிகிறது.
    • ஜெயசீலா, அபிஷேகம் நடந்தாலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்

    கடலூர்:

    சிதம்பரம் அருேக புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலா (வயது 27). இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது திருச்சிற்றம்பலம் வாயில் மூடப்பட்டிருந்தது. இதை யடுத்து வாயிலை திறக்கச் சொல்லி ஜெயசீலா அங்கிருந்த தீட்சிதர்களிடம் கூறியுள்ளார். ஆனால், உள்ளே அபிஷேகம் நடை பெறுவதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் கூறியதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெயசீலா, அபிஷேகம் நடந்தாலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்த துணை சுப்பிரண்டு ரகுபதி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து ஜெயசீலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் தாங்கள் நினைப்பதை எங்களுக்கு புகார் மனுவாக கொடுங்கள். 

    இது குறித்து துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அனுப்பி, இப்பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம் என்று கூறினர். இதையேற்ற ஜெயசீலா அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.அதில் உள்ளதாவது:-

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் தினசரி ஒரு பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே பணி புரியும் தீட்சதர்கள் பணம் பெற்றுக் கொண்டு கனகசபையின் மேல் பொதுமக்களை ஏற்றுகிறார்கள். பணம் தராதவர்களை அவமானப்படுத்தி வெளியில் அனுப்புகிறார்கள். இது தினசரி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இந்து அறநிலைத்துறையின் சார்பில் தினசரி ஒரு அதிகாரி காலை முதல் மாலை வரை கோவிலில் பொதுமக்கள் ஏறுவதற்கு கண்காணிப்புக்கு அதி காரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். துறையின் சார்பில் அதிகாரிகள் வருவது இல்லை. கொரோனா காலத்திற்கு முன்பிருந்த நடைமுறைபடி பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாக கூறி ஜெயசீலாவை அனுப்பிவைத்தனர். இதனால் நடராஜர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×