என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dindigul district"
மத்திய மாநில அரசுகளின் கல்வி ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்டங்கள் பெற ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதவிகள் பெறும் மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விபரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஆதார் அட்டை நகல் பெறப்படுகிறது. ஆதார் அட்டை பெற கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு புகைப்படம் எடுப்பவர்கள் வி.ஏ.ஓ.விடம் சான்றுபெற வேண்டி உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் வண்ணம் பள்ளிகளில் மையங்கள் அமைத்து ஆதார் அட்டைக்கு புகைபடம் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக புகைப்பட கருவி, கருவிழி பதிப்பு கருவிகள், படிவங்கள் போன்றவை வந்துள்ளன.
அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஆதார் மையம் அமைய உள்ளது. அதன்பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் இங்கு வரவழைக்கப்பட்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் வினய் வெளியிட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் மற்றும் ஒரே தொகுதிக்குள் இடம் மாற்றம் செய்தலுக்காக கடந்த 1.9.2018 முதல் 31.10.2018 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைகளின்படி 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும் தேர்தல் பணியாளர்கள் நேரடியாக அணுகி தகுதியுள்ள அனைத்து மாணவ-மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். இதனால் 18 முதல் 19 வயதுடைய 16 ஆயிரத்து 827 பேர் இளைய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 17.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் நிலையில் தீவிர ஆய்வு செய்து மாவட்டத்தில் 6 ஆயிரத்து 46 மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை சேர்க்கப்படாத தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் யாரும் இருந்தால் 1950 என்ற கட்டணம் இல்லா தொலைபேசியில் தகவல் கொடுத்தால் வீட்டிற்கே சென்று நிலை அலுவலர் உரிய படிவத்தில் மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள புகார்களை தெரிவிப்பதற்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மனோகர், கலெக்டரின் உதவியாளர் ராஜ்குமார், தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணிய பிரசாத் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு டாக்டர்கள், புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
எங்கள் கோரிக்கையை அரசுக்கு பலமுறை எடுத்துகூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் செவிசாய்க்க வில்லை. இதனால் திறனாய்வு கூட்டங்களை புறக்கணிப்பது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை நிறுத்தியது, சிறப்பு முகாம்களை ரத்து செய்தது போன்ற பல்வேறு மக்கள் நேரடி பாதிப்பு இல்லாத போராட்டங்களில் அரசு டாக்டர்கள் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 250 டாக்டர்கள் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதன்பிறகும் அரசு அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது, முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தையும், மருத்துவ மாணவ வகுப்புகளையும் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும் 8-ந் தேதி முதல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ராஜினாமா கடிதங்களை பெறுவது, 10-ந் தேதி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், 12-ந் தேதி நோயாளிகளின் சிகிச்சைகளை நிறுத்துவது, 13-ந் தேதி அடையாள வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்த உள்ளோம். அப்போதும் தீர்வு கிடைக்க வில்லை எனில் வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
அரசு ஆஸ்பத்திரியில் தற்போது மழைக்கால நோய்கள் தாக்கப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். இதுபோன்ற சமயத்தில் அரசு டாக்டர்களின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பயிற்சி டாக்டர்களை கொண்டு புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் அரசு ஆஸ்பத்திரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். #DoctorsStrike
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவாக சராசரிக்கும் கீழேயே மழை பெய்யும். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் சூழல் உள்ளது. கஜா புயலின் போது தொடர்ந்து மழை பெய்ததால் திண்டுக்கல் நகர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து புயல் சின்னங்கள் உருவானதால் அவ்வப்போது மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை 10 மணி வரையும் மாலை நேரத்தில் 3 மணிக்கே பனி சூழ்ந்து காணப்பட்டது.
நேற்று இரவு முதல் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சாரல் மழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
இதே போல் பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நத்தம், அய்யலூர், வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், அவதியடைந்தனர்.
குடைகளை பிடித்தவாறும், மழையில் நனைந்தபடியும் சாலையில் சென்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர். இருந்த போதும் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்ளன. மேலும் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஆத்தூர், காமராசர் அணை உள்பட பல்வேறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வு காணப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திண்டுக்கல் பகுதியில் பொதுவாகவே வறட்சி அதிக அளவில் நிலவி வருகிறது. விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. கஜா புயலின் தாக்கத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய புயல் சின்னத்தால் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை திண்டுக்கல் நகரில் விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான கொடைக்கானல், பழனி, நத்தம், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் நகரில் 14.10 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. கொடைக்கானல் 1.2, பழனி 1, நத்தம் 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. #Rain
திண்டுக்கல் மாவட்டத்தில் கஜாபுயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது கன மழை பெய்தது. இதனால் பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பழனி அருகே உள்ள வரதமா நதி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மொத்த கொள்ளளவான 67.47 அடியில் 49 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.
2 நாட்களாக பெய்த கன மழையால் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் 3 மணி நேரத்தில் அணையின் நீர் மட்டம் 17 அடி வரை எட்டி முழு கொள்ளளவை கடந்தது. இதனால் அணையை தாண்டி அதிக நீர்வரத்து ஏற்பட்டது.
எனவே அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனால் வறட்டாறு, சண்முகா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையை ஒட்டி அமைந்த குட்டிக் கரடு பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கரையோரங்களில் இருந்த குடிசை வீடுகள் மற்றும் சிறிய கோவில்களையும் மழை நீர் சூழ்ந்தது.
இதே போல் பாலாறு பொருந்தலாறு அணைக்கும் நீர் வரத்து திடீரென அதிகரித்தது. வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்ததால் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. அணையை ஒட்டி அமைந்துள்ள ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 54 அடியாக இருந்தது. கன மழை காரணமாக அணைக்கு 3,400 கன அடி நீர் வரத்து வந்ததால் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து அதன் முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வத்தலக்குண்டு வருவாய்த்துறையினர் சார்பில் தண்டோரா அடித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
வைகை அணை நீர் மட்டம் 68 அடியில் இருந்தது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மட்டம் சரிந்து வந்த நிலையில் கன மழை காரணமாக மீண்டும் நீர் வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது.
வைகை ஆற்று நீர் செல்லும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #GajaStorm
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்