search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disabled student"

    • ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் பெற்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • மாற்றுத்திறன் குழந்தைகளின் வளா்ச்சி படிநிலை தாமதம் குறித்து விளக்கமளித்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் தொடக்க நிலை மற்றும் இடைநிலையில் பயிலும் மாற்றுத் திறன் மாணவா்க ளின் பெற்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    அரண்மனைபுதூா் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சியை திருப்பூா் வடக்கு வட்டார வள மையத்தின் பொறுப்பு ஆசிரியா் மு.காா்த்திகேயன் தொடங்கிவைத்தாா்.இதில் கிராம சுகாதார செவிலியா் சாந்தி பேசுகையில், மாற்றுத் திறன் குழந்தைகளின் வளா்ச்சி படிநிலை தாமதம் குறித்து விளக்கமளித்தாா். இதில் பங்கேற்ற மாவட்ட உதவி திட்ட அலுவலா் அண்ணாதுரை மாற்றுத் திறன் குழந்தைகளை பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.இந்தப் பயிற்சியில் திருப்பூா் தெற்கு, வடக்கு வட்டார வள மையத்தின் பயிற்றுநா்கள், மாற்றுத் திறன் மாணவா்களின் பெற்றோா், அங்கன்வாடி பணியா ளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் வட்டார வளமையம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி திருப்பத்தூர் ஆர்.சி.பாத்திமா பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு வட்டார கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார்.

    கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனியப்பன் விழாவை தொடங்கி வைத்தார்.

    இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கு கொண்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பங்கு பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    மேலும் தேநீர், மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்லக்கண்ணு அனைவரையும் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் பிரியா, மார்‌ஷல், பிரகாஷ் மற்றும் ஆசிரியப் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.
    ×