என் மலர்
நீங்கள் தேடியது "Diwali"
- பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.
சுவாமிமலை:
தமிழகத்தில் சமீபத்தில் பட்டாசு குடோனில் ஏற்றபட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக காவல் துறை சார்பில் பட்டாசு குடோன் மற்றும் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் முறையாக உரிய அனுமதி பெற்று தொழில் செய்து வருகின்றரா என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அதிக அளவில் போலீசார் தீவிரமாக பட்டாசு குடோனில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவ்த் உத்தரவின் படி, திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையிலான போலீசார் நாச்சியார்கோவில் அருகே உள்ள நாகரசம்பேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் முறையாக அனுமதி பெறாமல் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் 204 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடந்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- தீபாவளி பண்டிகையையொட்டி 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,675 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 975 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.
சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், சொந்த ஊர் செல்ல அரசு பஸ்களில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிறு விடுமுறை இல்லை
- அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வருகிற 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பொருட்களையும் வழங்கும் வகையில், அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள ரேசன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படடுள்ளது.
- உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது
- காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டது.
அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டும் இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
- தனது ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே எஸ்டேட் உரிமையாளர் தெரிந்து கொண்டார்.
- மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்க உள்ளார்.
கோத்தகிரி:
தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் தொகையை போனசாக வழங்குவது வழக்கம்.
சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தங்க ஆபரணங்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களையும் வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக புல்லட் மோட்டார் சைக்கிளை வழங்கி அசத்தியுள்ளார் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த தேயிலை எஸ்டேட் உரிமையாளர்.
கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அந்த பகுதியில் சிவகாமி தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி விவசாயம், காளான் உற்பத்தி என பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்.
இவரது இந்த நிறுவனங்களில், 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை சமயங்களில் தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை கொடுத்து அசத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தனது எஸ்டேட்டில் 5 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வரும் ஊழியர்கள் 15 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு விலையுயர்ந்த புல்லட், மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
ஊழியர்களை திடீரென அழைத்த, எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார், உங்களுக்கான தீபாவளி பரிசு என சாவிகளை வழங்கியபோது, ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
உரிமையாளர் சிவக்குமார், தனது ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களை குறிப்பிட்டனர்.
அதை அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு ஹிமாலயன், தலா ரூ.2.45 லட்சம் மதிப்புள்ள 4 ராயல் என்பீல்டு கிளாஸிக், தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 ராயல் என்பீல்டு ஹன்ட்டர், தலா ரூ.1.20 லட்சம் மதிப்பில் யமகா ரே ஸ்கூட்டர் என 15 வாகனங்களை முன்பதிவு செய்து, தனது நிறுவனத்திற்கு வரவழைத்தார்.
பின்னர் 15 ஊழியர்களையும் அழைத்து, தங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்களித்த உங்களுக்கு எனது தீபாவளி பரிசு என கூறி ஒவ்வொருவரிடமும் சாவியை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்தார்.
இதுதவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும், போனஸ் தொகையும் வழங்க உள்ளார்.
இதுகுறித்து எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் கூறியதாவது:-
எங்கள் எஸ்டேட் கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு ஊழியர்களின் கடின உழைப்பும் பங்கும் உள்ளது.
ஊழியர்களை கவுரவித்து ஊக்கமளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் மகிழும் வகையில் போனஸ் வழங்குகிறேன். இந்த ஆண்டு 15 ஊழியர்களை தேர்வு செய்து புல்லட் வழங்கியுள்ளேன். வரும் ஆண்டுகளிலும் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் பரிசுகளை வழங்குவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஸ்டேட் உரிமையாளர் தனது ஊழியர்கள் 15 பேருக்கு புல்லட் மோட்டார் சைக்கிள்களை தீபாவளி போனசாக வழங்கி ஆச்சரியப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பஸ்களில் இடமில்லை.
- கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.
சென்னையில் இருந்து செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதோடு சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் இல்லை. இதனால் அரசு பஸ்களை நாடி மக்கள் செல்கின்றனர்.
சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 60 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.
அதனால் தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பஸ்களில் இடமில்லை. 9 மற்றும் 11-ந்தேதி பயணிக்க இடங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 64 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இதுவரையில் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் கோவை செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. அதனால் பிற போக்குவரத்துக் கழக பஸ்களை முன்பதிவு செய்ய இணைத்து வருகிறோம்.
முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு பஸ்களை போல ஆம்னி பஸ்களிலும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 1250 ஆம்னி பஸ்களில் 10-ந்தேதிக்கான இடங்கள் நிரம்பிவிட்டன.
- ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
- கனமழையின் காரணமாக இந்தாண்டு சற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தென்காசி:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அசைவ பிரியர்கள் ஆடு, கோழி, மீன் என அசைவ உணவுகளை விரும்பி உண்பர்.
இதனால் இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை இப்போதே வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள சந்தை வழக்கம் போல் இன்று கூடியது. இதில் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
அவற்றை இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது.
ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கனமழையின் காரணமாக இந்தாண்டு சற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இருப்பினும் ரூபாய் ஒரு கோடி வரையில் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது. ஆட்டுச்சந்தையின் அருகே மாட்டு சந்தையும் இயங்கி வரும் நிலையில் கனமழையின் காரணமாக மழைநீர் மாட்டு சந்தை முழுவதும் தேங்கியதால் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
மழைநீர் தேங்கிய பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
- சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளோம்.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சொந்த ஊர் செல்ல பொது மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.
சென்னையில் இருந்து செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பிவிட்டதோடு சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் இல்லை. இதனால் அரசு பஸ்களை நாடி மக்கள் செல்கின்றனர்.
சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 60 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.
அதனால் தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பஸ்களில் இடமில்லை. 9 மற்றும் 11-ந் தேதி பயணிக்க இடங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 64 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இதுவரையில் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை, நெல்லை, நாகர்கோ வில், தூத்துக்குடி மற்றும் கோவை செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. அதனால் பிற போக்குவரத்துக் கழக பஸ்களை முன்பதிவு செய்ய இணைத்து வருகிறோம்.
முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு பஸ்களை போல ஆம்னி பஸ்களிலும் நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 1250 ஆம்னி பஸ்களில் 10-ந் தேதிக்கான இடங்கள் நிரம்பிவிட்டன.
- திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் வேன் மற்றும் லாரிகளில் வியாபாரிகள் வந்திருந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
- வழக்கத்தை விட வியாபாரம் அதிகளவில் இருந்ததாகவும், 80 சதவிகித ஆடுகள் விற்பனை ஆனது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
மண்ணச்சநல்லூர்:
சமயபுரம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பல ஆண்டுகளாக ஆட்டுச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டுச் சந்தைக்கு சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, பாடாலூர் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வாரந்தோறும் கொண்டு வந்து விற்பது வழக்கம்.
அவ்வாறு விவசாயிகள் விற்பனை செய்யும் ஆடுகளை திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் கடா ஆடுகளை விற்பனைக்காவும், கோட்டை ஆடுகள் மற்றும் ஆடு குட்டிகளை வளர்ப்பதற்காகவும் வாங்கி செல்வதை பல ஆண்டுகளாக வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆட்டுக்கறி விற்பனைக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் இந்த வாரச்சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்தனர். வழக்கத்தைவிட அதிகளவில் ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் வேன் மற்றும் லாரிகளில் வியாபாரிகள் வந்திருந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். வழக்கத்தை விட வியாபாரம் அதிகளவில் இருந்ததாகவும், 80 சதவிகித ஆடுகள் விற்பனை ஆனது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆடுகளின் விலைகளில் பெரிய அளவில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் வியாபாரம் களைகட்டியதாகவும், வியாபாரிகளும், விற்பனையாளர்களும் தெரிவித்தனர்.
- ஹனி பீஸ் என்ற பட்டாசு கொளுத்தியவுடன், பச்சை, சிவப்பு நிறங்களில் ஒளிர்ந்து, தேனீக்கள் பறந்து மேலே செல்வது போல் தெரியும்.
- டிவின் லைட்டிங் பால் என்ற பட்டாசை திரியில் பற்ற வைத்தவுடன் நீர்வீழ்ச்சியை போல ஒளி மிளிர்ந்து பிளாஸ்டிக் கலர்களில் சிறு பந்துகள் வெளிவரும்.
சிவகாசி:
"குட்டி ஜப்பான்" என்று அழைக்கப்படும் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு கம்பி மத்தாப்பு துவங்கி வானில் வெடித்து சிதறி கண்களுக்கு விருந்தளித்து வர்ண ஜாலங்களை நிகழ்த்தும் பேன்சி ரகம் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் புதிய யுக்தியை கையாண்டு வாடிக்கையாளர்களையும், அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமிகளையும், இளைஞர்களையும் கவரும் விதத்தில் புதுப்புது பட்டாசு வகைகளை வித்தியாசமான முறைகளில் தயாரித்து அறிமுகப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.
அதேபோன்று இந்த வருடமும் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பல்வேறு தொழில்நுட்பங்களில், உற்பத்தியான புதிய ரக பட்டாசுகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் பரவசப்படுத்தும் விதமாக வந்துள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக பட்டாசு கடைகளில் குவிந்து, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வரிசையாக அணிவகுத்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கிரிக்கெட் கோப்பை கிரிக்கெட் போட்டியை பெருமைப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேட்-பால் என்ற பட்டாசு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திரியில் தீயை பற்ற வைத்தவுடன், கிரிக்கெட் மட்டையிலிருந்து கம்பி மத்தாப்பு போல எரிந்து, பந்திலிருந்து வண்ண நிறங்களில் புகை வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதே போல் இளைஞர்களையும், இளம்பெண்களை கவரும் வகையில் காதலை வெளிப்படுத்தும் ஆர்டின் வடிவ கம்பி மத்தாப்பு, மல்லிகை பூ போல் வெடித்து சிதறும் மதுரை மல்லி புஸ்வானம் பட்டாசுகள் இந்த ஆண்டு புதிய வரவாக அமைந்துள்ளது.
கிக்கபிள்ஸ் என்ற பட்டாசு மேல் கவர் சாக்லேட் கவர் போலிருந்து, அதன் திரியில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் சுழல்வது போல சுழன்று, அதிலிருந்து 2 பம்பரங்கள் தனியாக வெளியேறி கலர் வெளிச்சத்துடன் சுழல்கிறது. சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ள கிண்டர்ஜாய் சாக்லேட் வடிவ பட்டாசில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் போல சுற்றி, அதிலிருந்து 2 வண்ணத்து பூச்சிகள் பிரிந்து மேலே எழும்பி சென்று சடசடவென வெடித்து சிதறும்.
ஹனி பீஸ் என்ற பட்டாசு கொளுத்தியவுடன், பச்சை, சிவப்பு நிறங்களில் ஒளிர்ந்து, தேனீக்கள் பறந்து மேலே செல்வது போல் தெரியும். பைவ்ஜி பட்டாசை பற்ற வைத்தவுடன், 5 வண்ண கலர்களில் பைப்பிலிருந்து ஒளிர்ந்து வெளிவரும். டிவின் லைட்டிங் பால் என்ற பட்டாசை திரியில் பற்ற வைத்தவுடன் நீர்வீழ்ச்சியை போல ஒளி மிளிர்ந்து பிளாஸ்டிக் கலர்களில் சிறு பந்துகள் வெளிவரும்.
பாம்பு சக்கரம் என்ற பட்டாசை பற்ற வைத்தவுடன் சக்கரங்கள் சுழன்று, அதிலிருந்து கரும் நிறத்தில் பாம்புகள் படையெடுத்து வெளிவரும். அதேபோன்று மீன், முதலை, துப்பாக்கி போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பட்டாசுகளில் தீயை பற்ற வைத்த உடனே தீப்பிழம்பு சீறிப்பாய்ந்து முடிவில் வண்ண வண்ண நிறத்தில் புகை அதிலிருந்து வெளிவரும்.
இதுபோன்ற 15-க்கும் மேற்பட்ட பார்பி பொம்மை வடிவ பட்டாசு, ஹேப்பிஜி ராபி, மீமோ, கடல்குதிரை, மோட்டுபட்லு, ஹார்க், கிட்ஸ்ஜோன், கோல்டன் லைன், ட்ரோன், ஸ்கை கிங் படாபீகாக், பப்ஜி உள்ளிட்ட சிறுவர்களுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் கார்ட்டூன்களில் வடிமைத்த பட்டாசுகள் அனைத்து தரப்பினர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளிக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், இப்பொழுதே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு ரகங்களை சிறுவர், சிறுமிகள் ஆராய தொடங்கி, புதிய வகை பட்டாசுகளை வாங்கி சந்தோஷத்துடன் வெடித்து மகிழ தீபாவளி கொண்டாட்டத்திற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் புது வகையான பட்டாசுகளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதால் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும் எனவும், குழந்தைகளையும், இளைஞர்களையும் குறி வைத்தே ஒவ்வொரு வருடமும் புது பட்டாசுகள் உற்பத்தியாகி விற்பனைக்கு வருவதால், தீபாவளி பட்டாசு விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவெடிகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படாததால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் குறைவு தான். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இச்சமயத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக பட்டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.
- பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து கொண்டாட வேண்டும் என "விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி" என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய ரமேஸ்பாபு அதிகாரி தலைமையில் மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளிடம் பட்டாசுகளை வெடிக்க தவிர்க்க வேண்டிய இடங்கள், வெடிக்கும் முறை, அதற்கான இடம், நேரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரச்சாரம் செய்தனர், பின்னர் அதற்கான விபரங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
- ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
- விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.
சென்னை:
தீபாவளி பட்டாசை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்ப முடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் இந்த மோசடி பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும், இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.
பொதுமக்கள் https://luckycrackers.com/ என்ற இணைய தளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்தபின் பின்னர் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகிறார்கள். விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.
ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதனால் சம்பாதித்த பணத்தையும் இழந்து மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. நீங்கள் பட்டாசு வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும் சரி பார்க்கவும், வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணைய தளத்தில் உள்ளதா? எனச் சரி பார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.
நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி இருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண். 1930-ஐ டயல் செய்து புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.