search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "doctor balaji"

    • டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது.
    • நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    சென்னையில் அரசு டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டார். டாக்டர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் சார்பில் இன்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் இன்று நடந்தது. குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடங்கள் வழக்கம்போல் செயல்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தக்கலை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர் பாலாஜியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் என்றும் இதய பாதிப்பு அவருக்கு உள்ளதால் இதயவியல் சிறப்பு மருத்துவக் குழுவும் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி நான் நலமாக உள்ளேன் என்று கூறும் வீடியோவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கூறும் மருத்துவர் பாலாஜி நான் நலமாக இருக்கிறேன். காலை உணவு சாப்பிடுவதாகவும் கூறுகிறார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

    முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்தியாவைச் சேர்ந்த முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயரிய மனித நேயர் விருது வழங்கப்பட்டுள்ளது. #PakistanHumanityAward
    இஸ்லாமாபாத்:

    சிக்கலான முகக்குறைபாடுகளைக் கொண்ட பாகிஸ்தான் சிறுவர்களை, அந்நாட்டு பல் மருத்துவ சங்கம் 2010-ம் ஆண்டிலிருந்து முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பாலாஜியிடம் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வருகிறது. பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அந்த ஏழை சிறுவர்களுக்கு பாலாஜி, இலவச சிகிச்சை அளித்து சேவை செய்து வருகிறார்.

    இதனை கவுரவிக்கும் வகையில், சமீபத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் நடைபெற்ற 40-வது ஆசியா -பசிபிக் டென்டல் ஃபெடரேஷன் மாநாட்டில் பேராசிரியர் பாலாஜிக்கு பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் மிக உயரிய மனிதநேய விருது வழங்கி கெளரவித்துள்ளது.

    இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் பேராசிரியர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanHumanityAward 
    ×