search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctor prescription"

    • கருக்கலைப்பு மாத்திரைகளை விற்க டாக்டர் பரிந்துரை அவசியம் என மருந்து வணிகர்களுக்கு அறிவரைக்கப்பட்டது.
    • அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் மருந்தாளுநர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம், மாவட்ட மருதாளுநர்கள் சங்கம் சார்பில் பார்மசிஸ்ட்களுக்கான கருத்தரங்கம், பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மருந்தாளுநர்கள் சங்க மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை வகித்தார். மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னையா, மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். கண்டாச்சிபுரம் நிர்வாகி விஜய ஆனந்த் வரவேற்றார். முகாமில் ஓய்வு பெற்ற மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ஜெயராஜ், திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா, அரசு மருத்துவர்கள் பாக்கிய–லட்சுமி, ரவிக்குமார், மதன்ராஜ், விஷ்ணுகுமரன், சுமித்ரா, மருந்தாளுநர்கள் சங்க மாநில செயலாளர் வேங்கடசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கி பேசினர்.

    திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா பேசுகை–யில், தற்போது நமது நாட்டில் புதிதாக பரவி வரும் நோய்கள் குறித்தும், அவற்றுக்கு வழங்கப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்கும் வகையில் மாத்தி–ரைகளை பரிந்துரைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்து–களின் வீரீயம், வருங்காலத்தில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை விட ஆண்டிபயாட்டிக்ஸ் பயன்படுத்து–வதால் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.  மேலும் இதுபோன்று கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெறாமல் கடைகளில் விற்கக் கூடாது, இதனால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிக உதிரப்போக்கினால் உயிரிழப்புகள் கூட பல நேரங்களில் நடக்கிறது. எனவே கருக்கலைப்பு செய்வது குறித்து மகப்பேறு நல மருத்துவரின் ஆலோசனை பெறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருந்தாளுநர்கள், நோயாளி–கள் இடையேயான புரிதல் இருக்க வேண்டும் என அவர் பேசினார். இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகி அண்ணாமலை நன்றி கூறினார்.

    டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுக்கு மட்டுமே மாத்திரைகள் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Prescription #DoctorPrescription

    திருச்சி:

    திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கே.மனோகரன் வரவேற்றார்.

    அப்போது அவர் பேசுகையில், சில்லரை மருந்து வணிகர்கள் வலி நிவாரணி, தூக்க மாத்திரை, மனநல மருத்துவ மாத்திரைகள், கொடின் சல்பேட் கலந்த இருமல் மருந்துகள் அனைத்தும் ஷெட்டியூல்ட் எச், எச்-1-ல் வருவதால் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுக்கு மட்டும் மருந்து கொடுக்க வேண்டும்.

    அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து மருந்தாளுனர் கையெழுத்திட்டு சரியாக வைத்திருக்க வேண்டுமென கூறினார். மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ரவிக்குமார் பேசும்போது, காசநோய் மருந்து விற்பனை செய்பவர்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்த விவரங்களை அதற்கான படிவங்களில் பூர்த்தி செய்து மாதந்தோறும் மாவட்ட காசநோய் இயக்குனருக்கு அனுப்புவதுடன் அதன்நகலை சரக மருந்து ஆய்வாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும்,

    மருந்து உரிமங்கள் கோரும் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையம் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்று கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன், அமைப்பு செயலாளர் கிருபானந்தமூர்த்தி மற்றும் மீனாட்சி சேகர், கே.டி.சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    கூட்டத்தில் செயலாளர் பாஸ்கரன், அண்ணாமலை, மூர்த்தி, மீனாட்சி சேகர், பெரியசாமி, சண்முகவடி வேல் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள், மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் மற்றும் ஆய்வளர்கள் கலந்து கொண்டனர். #Prescription #DoctorPrescription

    ×