search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dog bites"

    • ராஜா கூலித் தொழிலாளி இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
    • சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை பவளக்கொடி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கூலித் தொழிலாளி. இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் நாட்டு மருந்துகள் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் இவர் சோர்வாகவும், வேலைக்கு செல்லாமலும் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று திடீரென இவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திட்டக்குடியில் தெருவில் விளையாடிய குழந்தைகளை நாய் கடித்து குதறியது.
    • குழந்தையை காப்பாற்ற வந்த குழந்தையின் தாய் கீதாவையும் கடித்துக குதறியது.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (30) இவர் மனைவி கீதா (27) மகன் சர்வேஷ் (4) பக்கத்து வீட்டு சிறுமி தீபா (15) ஆகியோர் வீட்டுக்கு முன்பு விளையாடி கொண்டு இருந்தனர். குழந்தைகளை தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய் திடீரென குழந்தை சர்வேஷ் முகம், கை பகுதியில் கடித்து கொதறியது. இவரை காப்பாற்ற வந்த குழந்தையின் தாய் கீதாவையும் கடித்துக குதறியது. சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்க வந்த பக்கத்து வீட்டு சிறுமி தீபாவையும் வெறிநாய் தொடர்ந்து கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர்.

    இதுபோல் தொடர்ந்து வெறி நாய்கள் கடிப்பதால் பெரியார் நகர் பகுதி மக்கள் தெருக்களில் அச்சத்துடன் நடமாட வேண்டி சூழ்நிலையில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும் .அப்படிப் பிடித்தால் மட்டுமே குழந்தைகள் பொதுமக்கள் என அணைவரும் நடமாட முடியும் என கூறினர் . பெரியார் நகரில் தெருநாய் குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விக்கிரவாண்டியில் நாய் கடித்து குதறியதில் 10 ஆடுகள் இறந்தன.
    • தினம்தோறும் ஆடுகளை மேய்ச்சல் செய்து விட்டு பண்ணையில் அடைத்து வளர்த்து வந்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி வசித்து வருபவர் ஜாகிர் உசேன் இவருக்கு சொந்தமான சுமார் 50 ஆடுகள்விக்கிரவாண்டி கீழக்கொந்தை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டின் அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்தார். ராமச்சந்திரன் தினம்தோறும் ஆடுகளை மேய்ச்சல் செய்து விட்டு பண்ணையில் அடைத்து வளர்த்து வந்தார் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு பண்ணையில் அடைத்து விட்டு இரவு தூங்கிவிட்டார் .நேற்று இரவு அடையாளம் தெரியாத நாய் ஆட்டுப்பண்ணையில் உள்ளே புகுந்து பன்னையிலிருந்து ஆடுகளை கடித்து குதறியது இதில் பத்து ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இருந்தன .அதிகாலை எழுந்து பார்த்தபோது 10 ஆடுகள் நாய்கள் கடித்து இறந்து கிடந்தன.

    • அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.
    • வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் தெக்கலூர், புதுப்பாளையம், சாமந்தங்கோட்டை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இரைத்தேடியும், தண்ணீருக்காகவும் மான்கள் காட்டைவிட்டு வெளியேறும். அப்போது நாய்கள் மான்களை கடித்து குதறுகின்றன. கடந்த ஒரு மாத காலமாக அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று தெக்கலூர் காட்டுப்பகுதியிலிருந்து இரண்டு மான்கள் தண்ணீர் தேடி தெக்கலூர் ஏரிப்பாளையத்தில் ஒரு கோவில் அருகே வந்துள்ளது. இதைப் பார்த்து அங்கிருந்த தெருநாய்கள் மான்களை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் ஒரு மான்காட்டுக்குள் மறைந்து தப்பியது. மற்றொரு 4 வயது மான் நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    ×