search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dog murder"

    • பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் கிரண் (வயது26). இவர் தேங்காய் வெட்டும் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் சுற்றித்திரிந்த நாயை பிடித்து தரையில் அடித்து கொன்றுள்ளார்.

    இதனை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி நான் ஏற்கனவே கொலை வழக்கில் உள்ளே சென்று வந்தவன் என மிரட்டி உள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் கிரண் சிறைச்சாலையில் இருக்கும்போது அந்த நாய் அவரது தாயை கடித்ததாவும் இதனால் ஆத்திரத்தில் இருந்த தான் அந்ததெருநாயை தேடி பிடித்து அடித்து கொன்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.

    மர்ம நபர் நாயை கூவம் ஆற்றில் மூழ்கடித்து கொன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவுகிறது.

    ராயபுரம்:

    போரூரை சேர்ந்தவர் மகாதேவன். விலங்குகள் நல அமைப்பை நடத்தி வருகிறார். இவர் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அதில், மூலகொத்தளம் சுடு காட்டில் மர்ம நபர் ஒருவர் நாய் ஒன்றை கொடூரமாக தாக்கி காலில் துணியை கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து வந்துள்ளார்.

    பின்னர் கூவம் ஆற்றில் நாயை மூழ்கடித்து கொன்று வீசி உள்ளார். மர்ம நபர் நாயை கொன்று வீசும் வீடியோ எங்களுக்கு கிடைத்தது. எனவே அவரை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    மேலும் மர்ம நபர் நாயை கொடூரமாக அடித்து கொல்லும் வீடியோவையும் ஆதாரமாக போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அந்த மர்ம நபர் யார்? என்று விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே நாயை கொடூரமாக கொல்லும் வீடியோ சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

    சென்னை நங்கநல்லூரில் ஓடஓட விரட்டி குரைத்ததால் ஆத்திரம் அடைத்து நாயை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை நங்கநல்லூர் ரகுபதி தெருவை சேர்ந்தவர் ராஜா (48). கூலி தொழிலாளி. நேற்று இரவு மது அருந்தி விட்டு அங்குள்ள சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு நின்ற நாய் ஒன்று அவரை பார்த்து குரைத்தது. அவர் விரட்டினார். ஆனால் அந்த நாய் அவரை விடவில்லை. தொடர்ந்து பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. அவர் சத்தம்போட்டு விரட்டினாலும் போகவில்லை.

    நாய் ஆக்ரோசமாக ராஜாவைவிடாமல் குரைத்ததால் ஆத்திரம் அடைந்தார். அருகில் கிடந்த கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் நாய் சுருண்டு விழுந்து இறந்தது.

    இதுபற்றி புளூகிராஸ் அமைப்புக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். பழவந்தாங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நாயை அடித்து கொன்றதாக ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
    ×