என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Donation"

    • திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோவில் விளங்குகிறது.
    • 72.100 கிராம் தங்கம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் உண்டியல்கள் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் செந்தில்குமாா், ஊத்துக்குளி சரக ஆய்வாளா் ஆதிரை, தக்காா் பெரியமருதுபாண்டியன், செயல் அலுவலா் காளிமுத்து ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் ரூ.16 லட்சத்து 40ஆயிரத்து 701 ரொக்கம், 72.100 கிராம் தங்கம், 60.700 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

    • நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்கப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை.
    • ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்க ப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில், ரூ.2 கோடி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு தலைமை வகித்த செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதனிடம், ஏற்றுமதி காப்பீட்டுக் கழகத்தின் தலைவர் செந்தில்நாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் ரூ 2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாபன், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், செஞ்சிலுவை சங்க நிர்வாகி தாமோதரன்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏவிபி. கார்த்திகேயன், பல்லடம் ஆறுமுகம், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அறநிலையத்துறையின் உதவி ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • தங்கம் 47 கிராம், வெள்ளி 3.5 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    அவிநாசி :

    அவிநாசி அருகேயுள்ள மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது.இக்கோவிலில் இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் 7 லட்சத்து 58 ஆயிரத்து 888 ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது. இதுதவிர தங்கம் 47 கிராம், வெள்ளி 3.5 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் ஆய்வாளர் செல்வபிரியா, செயல் அலுவலர் சந்திர சுந்தரேஸ்வரன், அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கருவலூர் மாரியம்மன் கோவிலிலும் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 839 ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இது தவிர தங்கம் 44 கிராம், வெள்ளி 202 கிராம் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது. மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர் அர்ஜுனன், செயல் அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    • மதுரையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    • அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 40). இவர் கடந்த 21-ந்தேதி, அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்த்த னர். அங்கு உடல்நிலை மோச மானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஜெய ராமன் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் 24-ந் தேதி ெஜயராமன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது உடல் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள் குடும்பத்தினரிடம் விளக்கினர்.

    இதையடுத்து அவர்கள் ெஜயராமனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து டீன் ரத்தினவேல் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு குழுவினர் மூலம் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன.

    இதில் கல்லீரல், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவ மனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், கண்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
    • இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கலையரசி வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்து, மலர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, முன்னாள் எம்.பி வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி குழு தலைவர் என்ஜினீயர் சிவகுமார், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகப்பிரியா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயி தானமாக கொடுத்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
    • 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிலாஸ்பூர்:

    இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார், மற்றொரு மகன் டாக்சி டிரைவராக உள்ளார்.

    இந்நிலையில், அவரது கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் வருவாய்த் துறையின் கணக்காளர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் தேவைப்பட்டது. நிலம் வாங்குவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த விவசாயி பாகீரத் சர்மா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வருவாய்த்துறைக்கு தனது 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    அந்த அலுவலகம் கட்டப்பட்டால் 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சாதாரன நிலத் தகராறுகளால் சண்டை ஏற்பட்டு சில நிமிடங்களில் உறவுகள் முறியும் இந்த காலகட்டத்தில், பாகீரத் சர்மா, ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆத்மதேவ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    • ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார்.
    • போலீசார் செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரில் 2 ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார். அப்போது அந்த நபர் பணியில் இருந்த 2 நர்சிடம் நன்கொடை கேட்பது போல் நடித்து, கவனத்தை திசை திருப்பி, அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிச் சென்றார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்னூரில் உள்ள சகாயமாதா முதியோர் இல்லத்தில் நகர திமுக சார்பில் கழக செயலாளர் ராமசாமி தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, நகரமன்ற உறுப்பினர்கள் மன்சூர், ஜாகிர், குமரேசன், தி.மு.க. பிரமுகரும், சமூகசேவகருமான கோவர்தணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.
    • நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே குமரானந்தபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன் (22-வது வார்டு), பத்மாவதி (21-வது வார்டு), பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு, பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.20 லட்சத்து 7 ஆயிரத்துக்கான காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.

    இதில் 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
    • கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.

    இறந்த நபர், மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டுமானால், கண் தானத்தைத் தவிர சிறந்த வழி வேறு ஏது?

    கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

    கண்தான வங்கியில் இருந்து டாக்டர்கள் வரும்வரை இறந்தவரின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும்.

    இறந்தவர் உடல் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

    நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களின் கண்களை கூட தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் கண்களையும் தானம் செய்யலாம்.

    புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது. எனவே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.

    • திருச்சுழி நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
    • மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளை நூலகத்தில் அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு கிளை நூலகத்தின் நூலகர் மற்றும் வாசகர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சுழி கிளை நூலகத்திற்கு அருப்புக்கோட்டை ஜெயன்ட்ஸ் குழுவினர் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவின் தலைவர் வெள்ளையரெட்டி தலைமை தாங்கினார். திருச்சுழி கிளை நூலகத்தின் வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் முன்னிலை வகித்தார். நூலகரான பாஸ்கரனிடம் அருப்பக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவினர் ரூபாய் 4,000 மதிப்புள்ள போட்டித்தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினர். ஜெயண்ட்ஸ் குழுவின் இணைய அலுவலர் திருவண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஜெயண்ட்ஸ் குழுவின் நிதிகளுக்கான இயக்குனர் காத்தமுத்து, பாக்கியராஜ், நூலக பணியாளர் மஞ்சுளா, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.
    • பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பாமல் வைத்துக்கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது.

    பல மாவட்டங்களில் ஏராளமானோர் தங்களின் உடமைகளை இழந்தனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.

    அவற்றை அதிகாரிகள் பெற்று முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பினர். பின்பு அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதல்வரின் நிவாரணநிதிக்கு அனுப்பாமல் மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருக்கி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் சஜி வர்கீஸ். இவர் தனது அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் அன்பளிப்பாக பணம் பெறுவதாகவும், சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

    அந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் கடுத்துருத்தி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அதிடியாக சென்று ஆய்வு செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீசிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்ட போது பேரிடர் நிவாரணநிதிக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீஸ், முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

    சுமார் 9பேர் வழங்கிய தொகையை அவர் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.10லட்சம் வரையிலான பணத்தை அவர் முறைகேடு செய்தது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வுசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்சீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பேரிடர் நிவாரணத்துக்கு பொதுமக்கள் நன்கொடை யாக வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×