search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking lakes"

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பூண்டி, புழல் உள்ளிட்ட 4 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து இருந்தது.
    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஏரிகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி.

    தற்போது 4 ஏரிகளையும் சேர்த்து 2 ஆயிரத்து 193 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 20 சதவீதம் ஆகும்.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நள்ளிரவில் திடீரென சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    இதேபோல் பூண்டி, புழல், சோழவரம் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து இருந்தது. அதிகபட்சமாக பூண்டி ஏரிப்பகுதியில் 74 மி.மீட்டரும், பூண்டி, சோழவரம் பகுதியில் தலா 22 மி.மீட்டர், செம்பரம்பாக்கத்தில் 47 மி.மீட்டரும் பதிவானது. இந்த 4 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளும் மொத்தம் 165 மி.மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, கோடை காலத்தை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு இதே நாளில் 82 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. இதே அளவு மழை மேலும் சில நாட்கள் நீடித்தால் அக்டோபர் இறுதி வரையில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது’ என்றார்.
    ×