search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water board"

    • குடிநீர் வாரியம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
    • பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் மிஷின் சார்பில், கிராம குடிநீர் மற்றும் சுகா தாரம் மேலாண்மை உறுப் பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    குடிநீர் வடிகால் வாரியம் விருதுநகர் கோட்ட நிர்வாக பொறியாளர் கென் னடி, உதவி நிர்வாக பொறி யாளர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி ஆணையாளர் சிவ குமார், வட்டார வளர்ச்சி அலு வலர் மீனாட்சி ஆகி யோர் தொடங்கி வைத்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் தண்ணீரின் தரம், பாதுகாப்பு, சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங் களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட் டது. பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவக்கப்பட்டு 51 ஆண்டுகள் கடந்த நிலையில், முதன் முறையாக பணியிலிருப்பவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு, அதன் ஓய்வூதிய தாரர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி வைத்த அரசு தி.மு.க. அரசு. பணியில் இருப்போரையும், ஓய்வூதியதாரர்களையும் பிரித்துப் பார்த்து அகவிலைப்படி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை என்றும், பணியில் இருப்போருக்கு வழங்கப்படும்போது ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுவதுதான் நடைமுறை என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப்பணியாளர்களும், ஓய்வு பெற்றவர்களும் தெரிவிக்கிறார்கள்.

    மேலும், ஓய்வு பெற்ற பெரும்பாலான ஊழியர்கள் வறுமை நிலையில் இருப்பதாகவும், மருத்துவம் மற்றும் வீட்டு வாடகைக்கு மட்டுமே பெரும் தொகை செலவிடப்படுகிறது.

    விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தத் தருணத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வை இந்த ஆண்டு ஜனவரி மாதம் மூதல் ரொக்கமாக அளித்தால் பேருதவியாக இருக்கும். வயதான காலத்தில் வேறு பணிகளுக்கு செல்ல முடியாத நிலையில் பெரும்பாலானோர் இருப்பதாகவும், பணியில் இருப்போருக்கு வழங்கப்படும்போது ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை இனி வருங்காலங்களில் கடைபிடிக்க வேண்டு மென்றும் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    எனவே, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான 14 சதவீத அகவிலைப்படி உயர்வை பணியில் இருப்போருக்கு வழங்கப்பட்டது போல 1-1-2022 முதல் உயர்த்தி வழங்கவும், பிற வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மாநிலம் முழுவதும் அடுத்த 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான தண்ணீர் தமிழக அணைகளில் இருப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்து உள்ளதால், ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் தற்போது அதிகம் பேசப்படும் வார்த்தை ‘குடிநீர் தட்டுப்பாடு’ என்பது தான்.

    ஆனால் மாநிலம் முழுவதும் சுமார் 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தேவையான குடிநீர் வழங்குவதற்கு போதுமான நீர் தமிழக அணைகளில் இருப்பதாக மாநில குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் கூறியதாவது:-

    சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மேட்டூர் அணை மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தினசரி 1,016.07 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தினசரி ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    93 ஆயிரத்து 470 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 16 ஆயிரத்து 172 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் காவிரி மூலம் 120 நாட்களும், கொள்ளிடம் ஆறு மூலம் நூறு நாட்களுக்கும் குடிநீர் வினியோகிக்க முடியும்.

    மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறுவாணி அணை மற்றும் பில்லூர் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் சோலையாறு அணையில் 255 மில்லியன் கன அடியும், பரம்பிக்குளம் அணையில் 2 ஆயிரத்து 204 மில்லியன் கன அடியும், ஆழியாறு அணையில் 575 மி.க.அடியும், திருமூர்த்தி அணையில் 309 மி.க.அடியும், சிறுவாணியில் 22.04 மில்லியன் கன அடியும், பில்லூர் நீர்த்தேக்கத்தில் 1,182 மி.க.அடியும் தண்ணீர் உள்ளது.

    பரம்பிக்குளத்தில் இருந்து 150 நாட்களுக்கும், சிறுவாணியில் இருந்து 90 நாட்களுக்கும், பில்லூர் நீர்தேக்கத்தில் இருந்து 170 நாட்களுக்கும் குடிநீர் வழங்க முடியும். இதைப்போல சாத்தனூர் அணையில் 825 கனஅடி தண்ணீர் உள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்த 120 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சென்னை மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரியை வருகிற 30-ந்தேதி (செப்டம்பர்)-க்குள் செலுத்த வேண்டும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது-

    சென்னை மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வசதி பெற்றவர்கள் வருகிற 30-ந்தேதி (செப்டம்பர்)-க்குள் குடிநீர் வரியை செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் சிந்தாதிரிப்பேட்டை தலைமை அலுவலகத்திலும் உடனடியாக வரிகட்டலாம்.

    வரியை செலுத்த தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராத தொகையும் வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் தோட்டம், கழிவறை மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை 1000 லிட்டர் 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #ChennaiMetroWater
    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் குடிநீர் அல்லாத பிற தேவைகளான தோட்டத்துக்கு, கழிவறைக்கு, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தேவைகளுக்காக மட்டும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குடிநீர் வாரியத்தின் சார்பில் கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெற ஆயிரம் லிட்டருக்கு ரூ.18.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீரை பெற விரும்புவோர் குடிநீர் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு தேவைப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் பற்றி மேலும் விபரங்கள் அறிய கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    கொடுங்கையூர், கோயம்பேடு, செயற்பொறியாளர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வடக்கு-81449 30800, நெசப்பாக்கம், பெருங்குடி, செயற்பொறியாளர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தெற்கு-81449 30600.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#ChennaiMetroWater
    ×