என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "driver dies"
- வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.
- சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர்.
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் வெளிப்புற வாயில் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், ஓட்டுனர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "நேற்று இரவு 10:30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுவற்றில் மோதியது. இதனால், வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
ரகசிய சேவை, கொலம்பியா மாவட்டத்தின் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து, இந்த அபாயகரமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயிலில் வாகனம் மோதிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது.
- டிரைவர் விக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
கடலூர்:
வேலூர் மாவட்டம் திருப்ப த்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவர் மனைவி பரிமளா (வயது 40), மகன் தருண்ராஜ் (19). உடன் தனது காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது. அப்போது கார் டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் பழனிவேலின் மனைவி பரிமளா, மகன் தருண்ராஜ் ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட விக்கியை சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் மூலம் பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்தில் உயிரிழந்த பரிமளா, அவரது மகன் தருண்ராஜ் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் விக்கிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பழனிவேலை அவரது உறவினர்கள் மேல்சிகி ச்சைக்காக பங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார் விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 2 லிருந்து 3 ஆக உயர்ந்தது சோகத்தை ஏற்படுத்துகிறது.
- நாகேந்திரன் குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார்.
- ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிச்சை பிள்ளை மகன் நாகேந்திரன் (வயது 48).
பாலத்தில் மோதி கவிழ்ந்தது
ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 18-ந் தேதி குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மதியம் ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
ராதாபுரம் அருகே உள்ள பெத்தரங்கபுரம் ஊருக்கு கிழக்கே உள்ள பாலத்தில் சென்றபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நாகேந்திரன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரது குடும்பத்தினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனிடையே அந்த வழியாக சென்றவர்கள் விபத்து நடந்ததை பார்த்து ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் போலீஸ் ஜீப் ஓட்டிக் கொண்டு மாளிகை மேடு சென்றார். அப்போது ஜீப் தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது.
- இவருக்கு தலையில் பலத்தஅடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ராயர்பா ளையதை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31) இவர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் ஜீப் டிரைவராக இருந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள்கள்உள்ளனர் இவர் நேற்று போலீஸ் ஜீப் ஓட்டிக் கொண்டு மாளிகை மேடு சென்றார். அப்போது ஜீப் தறிகெட்டு ஓடி கவிழ்ந்தது.
இதனால் இவருக்கு தலையில் பலத்தஅடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து இவரது மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்.இன்ஸ்பெக்டர்தங்கவேல் ஆகியோர்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 48 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தார்.
- ஆம்னி பஸ்சின் டிரைவர் ஸ்டியரிங்கின் மீது சாய்ந்து விழுந்தார்.
கடலூர்:
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிபுராஜ் (வயது 42). இவர் சுற்றுலா ஆம்னி பஸ்சின் டிரைவராக உள்ளார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம் ராஜ்நகர் மாவட்டம், கொல்லேகால் பகுதியில் இருந்து 48 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தார். தமிழகத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கோவில்களை சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிக் காட்டினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை மேல்மருத்துவர் கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு புதுச்சேரிக்கு வந்தனர்.
புதுச்சேரியில் தங்கிவிட்டு இன்று அதிகாலை ஆம்னி பஸ்சினை எடுத்துக் ெகாண்டு காலை 6 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 48 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆம்னி பஸ்சினை ஓட்டியபடி வந்தார். அப்போது வடக்கு ரத வீதியில் வரும் போது அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பயணி களை உஷார்படுத்திய அவர், ஆம்னி பஸ்சினை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகளை பஸ்சை விட்டு இறங்க வலியுறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் பஸ்சின் முன்பக்கம் சென்று பார்த்த போது, ஆம்னி பஸ்சின் டிரைவர் ஸ்டியரிங்கின் மீது சாய்ந்து விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்ட சுற்றுலா பயணிகள் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட போதும் புத்திசாலித்தனமாக ஆம்னி பஸ்சினை சாலையோரம் நிறுத்திவிட்டு, டிரைவர் இறந்து போன சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் சோகத்தையும், சிதம்பரம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
- பைக்கில் சென்றபோது விபத்து
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுதுரை இவர் வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரின் கார் டிரைவராக பணி செய்து வந்தார். நேற்று காலை 9 மணி அளவில் தனது பைக்கில் பொன்னுதுரை வாலாஜாபாத்திற்கு சென்று கொண்டிருந்தார்
அப்போது ஆற்காடு காஞ்சிபுரம் சாலை வட இலுப்பை கிராமம் அருகே வந்தார். அப்போது வளைவு ஒன்றின் எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுதுரை சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பொன்னு துரையின்மனைவி சித்ரா பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- தூக்க மாத்திரை சாப்பிட்டதால் விபரீதம்
- காரணம் என்ன? விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள பெரிய கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). ஆட்டோ டிரைவர். கடந்த 3-ந் தேதி இரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட இவர் மயங்கிய நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலை தடுமாறி கோபால கிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 43). இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேனில் துணி லோடு ஏற்றி கொண்டு சென்றார். அவருடன் அண்ணா மலை என்பவர் உடன் சென்றார்.
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அந்த வழியாக மற்றொரு வேன் வந்தது.
அப்போது அந்த வேனை கோபாலகிருஷ்ணன் முந்த முயன்றார். அப்போது நிலை தடுமாறி கோபால கிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அண்ணா மலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே கோபால கிருஷ்ணன் பரிதாபமாக இற ந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலை கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை நெல்லை சீவலப்பேரியை சேர்ந்த டிரைவர் முருகன் (வயது 36) ஓட்டினார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி அருகே உள்ள விராலிமலை குறிச்சிப்பிரிவு நான்குவழிச்சாலை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது, நிலைதடுமாறியதில் லாரியின் பின்பக்கம் வேகமாக பஸ் மோதியது.
இதில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் முருகன் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ்சில் இருந்த பயணிகள் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த நெல்லை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஜாஸ்மின் (18), விழுப்புரம் மேலபாதி ரெட்டியார் தெருவை சேர்ந்த தாமோதரன் (37), சென்னை ஏரியாறு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (47), அருப்புக்கோட்டையை சேர்ந்த செல்வம் (45) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் சிகிச்சை பெற்று அங்கிருந்து திரும்பி சென்றனர்.
டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நரியூத்து காலத்துகோட்டம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் நிர்மல் (வயது32) சரக்கு வாகன டிரைவர்.
இன்று அதிகாலை இவர் சரக்கு வாகனத்தில் திண்டுக்கல்லை அடுத்த பித்தளைபட்டி பகுதிக்கு தென்னைநார் லோடு ஏற்ற வந்தார். லோடு ஏற்றியதும் ஊருக்கு திரும்பினார். திண்டுக்கல் ரெயில்வே பாலம் இறக்கத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற லாரி மீது வாகனம் மோதியது.
இதில் வாகனத்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் டேவிட் நிர்மல் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லாரி மீது மோதிய வாகனத்தை மீட்க தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடி வாகனத்தையும், டேவிட் நிர்மல் உடலையும் மீட்டனர்.
பின்னர் டேவிட்நிர்மல் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பலியான டேவிட் நிர்மலுக்கு திருணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் ரெயில்வே பாலம் மிகவும் குறுகலாகவே அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் நத்தம், சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள், வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்பகுதி மக்கள் வர்த்தக ரீதியாக பொருட்கள் வாங்க இந்த பாதையில்தான் திண்டுக்கல்லுக்கு வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் இருந்து கருவேல மரங்கள் லோடு ஏற்றி செல்லும் லாரிகளும், ரெயில் நிலையத்தில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் கொண்டு செல்லும் லாரிகளும் இந்த பகுதி வழியாகத்தான் செல்கின்றன.
சில நேரங்களில் இந்த லாரிகளை டிரைவர்கள் சாலை ஓரமாக நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் சாலையோரம் லாரிகளை நிறுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதையும் மீறி லாரிகள் நிறுத்தப்படுவதால் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து இரும்பு கம்பி பாரம் ஏற்றி கொண்டு லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் ரோடு பகுதியை சேர்ந்த பொன் ராஜ் (வயது41) என்பவர் டிரைவராகவும், மகாராஜன் கிளீனராகவும் இருந்தனர்.
இன்று அதிகாலை தருமபுரி அடுத்துள்ள தொப்பூர் கணவாய் மத்திய நார்த்தங்கால் பகுதியில் சென்ற போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் லாரி டிரைவர் பொன்ராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கிளீனர் மகாராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விபத்தில் சிக்கிய லாரியை போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இதனால் தொப்பூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் பெரியசாமி (வயது 27). இவர் மதுரை ஆவின் நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். தினமும் அதிகாலையில் மதுரையில் இருந்து தேனிக்கு சென்று பாலை கொண்டு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று நள்ளிரவு பெரியசாமி வேனில் தேனிக்கு புறப்பட்டார். உசிலம்பட்டி அருகே உள்ள கொங்குபட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் நடுரோட்டில் வேன் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த டிரைவர் பெரியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். வேனில் இருந்த உதவியாளர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்