என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Edward Forum"
- மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் இருதய நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
- மன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமாறு மன்ற செயலாளர் டாக்டர் இஸ்மாயில் தெரி வித்துள்ளார்.
மதுரை
மதுரை மேலவெளி வீதியில் நூற்றாண்டு கடந்த விக்டோரியா எட்வர்டு மன்றம் இயங்கி வருகிறது. இங்கு நவீன நூலகம் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. இங்கு உறுப்பினர்களாக உள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை வடபழனியில் உள்ள போர்டிஸ் மருத்துவ மனையும், விக்டோரியா எட்வர்டு மன்றமும் இணைந்து இருதய அறுவை சிகிச்சை மற்றும் இருதய நோய்களுக்கான இலவச சிறப்பு முகாம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இந்த மருத்துவ முகாமிற்கு மன்றச் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் தலைமை தாங்குகிறார். இந்த மருத்துவ முகாமில் தலை சிறந்த மருத்துவர்கள் பங்கேற்று உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கு கிறார்கள். தேவைப்படும் நபர்களுக்கு இலவச பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. அனைத்து இதயம் தொடர்பான பிரச்சி னைகளுக்கும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மேலும் டாக்டர்களின் பரிந்துரையின்படி இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகள் இலவசமாக எடுக்கப்படு கிறது. பை-பாஸ் சிகிச்சை, இருதய வால்வு மாற்றுதல், இதயமாற்று அறுவை சிகிச்சை, ஸ்டண்ட் வைத்தல் போன்ற மருத்துவ சேவைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து தரப்படும்.
மேலும் முக்கியமாக இந்த மருத்துவ முகாமில் பங்கேற்கும் இதயம் தொடர்பான நோயாளிகள் ஏற்கனவே சிகிச்சை எடுத்து வரும் பட்சத்தில் அதற்குரிய முழு விவரங்களை கையில் எடுத்து வரவும், அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும்.
இந்த மருத்துவ முகாமில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு மன்ற செயலாளர் டாக்டர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.