என் மலர்
நீங்கள் தேடியது "Election"
- விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும்.
- இந்த தேர்தல் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் சென்று சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தேர்வாகினர். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
- பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் கனடாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் புதிய அதிபராக பதவி ஏற்ற பிறகு கனடாவுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டது. மேலும் கனடாவுக்கு அதிக வரி விதிக்கப்போவதாகவும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா சேர்க்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
அதிபர் டிரம்பின் இந்த நியாயமற்ற வரிகளை எதிர்கொள்ள கனடாவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். நேற்று அவர் ஒட்டாவில் உள்ள ரிடோ ஹாலில் ஆளுநர் ஜெனரல் மேரி சைமனை சந்தித்தார். பாராளுமன்றத்தை கலைக்க அவர் பரிந்துரை செய்தார்.
கனடா பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதி வரை இருக்கிறது. ஆனால் மார்க் கார்னிக்கு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருவதால் அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.
இது குறித்து கவர்னர் ஜெனரலை சந்தித்த பிறகு பிரதமர் மார்க் கார்னி பேசும் போது, "கனடாவில் ஏப்ரல் மாதம் 28ம் தேதி தேர்தல் நடத்த கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்து உள்ளார். அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது.
டிரம்ப் நம்மை பிரிக்க நினைக்கிறார். அதை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் கனடா உள்ளது. இது போன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழி நடத்த வேண்டும் என்பதில் கனடா மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
- சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
- மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.
- வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேர்தல் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.
இதில் மாணவிகள் பங்கேற்று தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு, வாக்களிக்க பணம் பெறக்கூடாது, வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர். சிறப்பாக பாடல் வரிகள் அமைத்து, பாடிய மாணவிகளின் பெயர்கள் இளையான்குடி வட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளையும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோரையும் முதல்வர் அப்பாஸ் மந்திரி பாராட்டினார்.
- கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
- ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அம்மாப்பேட்டை:
அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், கொத்தட்டை நடராஜன், குட்டி தெட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகி உள்ளன
- மொத்தம் 42 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 4-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன.
கடந்த தேர்தலில் டெல்லி மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. பாஜக இரண்டாவது இடமும், காங்கிரசுக்கு குறைந்த அளவிலும் இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைக்காக, மொத்தம் 42 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 68 கண்காணிப்பாளர்கள் இந்த பணியை கண்காணித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய 136 பொறியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக வாக்கு எண்ணும் மையங்களில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
- நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஆறுமுகநேரி:
இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விழா மற்றும் சோனியா காந்தி பிறந்த தின விழா ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார செயலாளர் அழகேசன், தூத்துக்குடி மாவட்ட செய லாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நகர துணை தலைவர்கள் சிவகணேசன், மூக்கன் கிறிஸ்டியான் நகரச் செய லாளர்கள் ராஜலிங்கம், நடராஜன், மகளிர் காங்கிரஸ் தலைவர் பெனிட் ராணி, முன்னாள் வார்டு கவுன்சிலர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடக்கிறது.
- வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கீழக்கரை மற்றும் கமுதி வட்டங்களில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்க
ளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
நீரினை பயன்படுத் துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து நாளை (24-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை (காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பு மனுக்கள் பெறப்படும்.
இந்த வேட்புமனுக்கள் 28-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூர்ந்தாய்வு செய்து, ஏற்கத்தக்க வேட்பு மனுக்களை சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். போட்டியில் இருந்து விலகிகொள்ள விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை 28-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பார். நீரினை பயன்படுத்துவோர் சங்கங் களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5.2.2023 அன்று மாலை 4 மணி முதல் எண்ணத் தொடங்கி முடிவுகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
ராமநாதபுரம் வட்டம் சார்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவ லகத்திலும், பரமக்குடி வட்டத்திற்கு உதவி ஆட்சியர் அலுவலகத்திலும், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவாடானை வட்டத்தில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கீழக்கரை வட்டத்தில் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கமுதி வட்டத்தில் கமுதி வட்டாட்சியர் அலுவ லகத்தில் பெற்றுக் கொள்ள லாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
- கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.
ராய்பூர்:
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;
"வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
- 2023 - 24 ம் ஆண்டுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2 முதல் 6 வரை செய்ய முடிவு செய்யப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு ஆண்டுதோறும் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்கிடையே 2023 - 24 ம் ஆண்டுக்கான வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொருளாளர் சக்தி தேவி மற்றும் வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி, தனபாலன்,வெங்கடாஜலபதி,மாணிக்கராஜ்,மகேஷ்,ராஜேஷ்,மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இதில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகளாக மூத்த வழக்கறிஞர்கள் தனபாலன், மாணிக்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2 முதல் 6 வரை செய்யவும், ஏப்ரல் 27 அன்று ஓட்டுப் பதிவு நடத்தி, அன்று மாலையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
- ராஜபாளையத்தில் ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடந்தது.
- வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் ராஐபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்றது. ராஜபாளையம் நகரச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மதியழகன் விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி கல்லத்தியானிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ராஜபாளையம் நகர அவைத்தலைவராக சேது.இன்பமணி, பொருளாளராக பிச்சைக்கனி, துணைச்செயலாளர்களாக அக்பர் அலி, லிங்கம், பூபதி மற்றும் மாவட்ட பிரதிநிதிகளாக புஷ்பவேல், ஞானசேகரன், குருமூர்த்தி ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ரகுராமன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கம்மாபட்டி ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ம.தி.மு.க. தலைமை அறிவிப்பின்படி, திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் பணி துணைச் செயலாளர் சேதுபதி தேர்தல் ஆணையாளராக செயல்பட உள்ளார். தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் காலை 11 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள பெரியார், அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த இரு நிகழ்ச்சிகளிலும் வட்டக்கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக வருகை தந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.