search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election campain"

    • அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
    • அதிபர் தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார்.

    அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

    இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன்."

    "இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு என் முழு ஆதரவு, ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயகவாதிகள் ஒன்றுகூடி டிரம்ப்-ஐ தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதிபர் தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார்.

    இந்நிலையில், அதிபர் வேட்பாளராக கமலா தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    இதற்கிடையே, பைடனின் பிரசார செயலகம், கமலா பிரசார செயலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பிரசாரத்தின்போது, நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்டது டொனால்ட் டிரம்ப்பா ? வழக்கறிஞர் கமலா ஹாரிசா ? என்ற முழுக்கத்துடன் கமலா அணி பிரசாரத்தை தொடங்கியது.

    பிரசாரத்தில், பெண்களின் கருத்தடை உரிமை, ஜனநாயகத்தை டிரம்பிடமிருந்து காப்பது உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்ய கமலா திட்டமிட்டுள்ளார்.

    அதிபர் வேட்பாளராக பெறப்பட்ட பல மில்லியன் டாலர் பிரசார நிதியை கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு மாற்றிக் கொடுக்கும் வேலைகளில் பைடன் இறங்கியுள்ளார்.

    ×