search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election poll"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல்.
    • ஆனால், நான்கு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. மிசோரம் மாநிலம் வாக்கு எண்ணிக்கை நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. சத்தீஸ்கர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    என்றபோதிலும், அந்தந்த கட்சித் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.

    இன்று வாக்கு எண்ணிக்கையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதன்பின் வாக்கு எந்திரங்கள் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன் திரண்டுள்ளனர். அவர்கள் கைகளில் பதாதைகளுடன் நின்றுள்ளனர். மேலும், சிலர் பட்டாசு வெடித்து தற்போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ஒரு காங்கிரஸ் தொண்டர் ஹனுமான் வேடமணிந்து ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.

    • ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.
    • குரேஷி உள்ளிட்ட ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பலரும் கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ்குமார், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு வசதியாக 6 தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள 6 சீர்திருத்தங்களில் முதன்மையானது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளையோ, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பது தான்.

    குரேஷி உள்ளிட்ட ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பலரும் கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளனர். எனவே, கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கும் 6 சீர் திருத்தங்களையும் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×