என் மலர்
நீங்கள் தேடியது "electric pole"
- சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.
- ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் கவனத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் நல சங்கத்தின் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையில் ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே சென்றுவர முடியாத அளவிற்கு போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.
மேலும் மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்று வதற்கு மின்வாரியத்திற்கு குறிப்பிட்ட தொகை பணம் கட்ட வேண்டும் என்கிற சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறையில் மின்சார வாரியத்திற்கு செலுத்த நிதிகள் இல்லை என்று கூறி வந்தனர். இதுகுறித்து ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் கவனத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் நல சங்கத்தின் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாக ஊராட்சி தலைவர் அந்த கோரிக்கையை ஏற்று மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தினார். இதனையடுத்து மின் கம்பங்களை அகற்றிவிட்டு வேறு இடத்தில் வைக்கும் பணிகள் தொடங்கியது.கோரிக்கையை ஏற்று மின்சார வாரியத்திற்கு பணம் செலுத்திய ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மற்றும் மின்சார வாரியத்தின் மின்பொறியாளருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
- பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
- இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.
திருவாரூர்:
திருத்துறைப்பூண்டியில் இருந்து ராயநல்லூர் புழுதிக்குடி வழியாக விக்கிரபாண்டியம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மினி பஸ்சை டிரைவர் சுந்தரம் (வயது 50) ஓட்டினார்.
கண்டக்டர் வருண்குமார் (25) பணியில் இருந்தார். மினி பஸ் விக்கிரபாண்டியம் வந்து விட்டு திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் விக்கிரபாண்டியம் கீழத்தெரு அருகே பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகிலிருந்த குட்டையில் இறங்கியது.
இதில் பயணம் செய்த மஞ்சவாடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (22), டிரைவர் சுந்தரம், கண்டக்டர் வருண்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
இவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.
இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. மின் கம்பம் முறிந்தபோது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர்.
- கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியில் சென்ற கண்டெய்னர் லாரி அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் மீது உரசியது. இதில் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. இந்தநிலையில் இன்று காலை மின்கம்பம் அருகே காரில் பயணிகள் 4பேர் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென மின்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 4பேரும் உயிர் தப்பினர். மின்சாரம் இருந்த நிலையில் கம்பம் சாய்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று மின்சாரத்தை துண்டித்தனர். போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர். மின்தடை செய்யப்பட்டதால் பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் சற்று அவதியடைந்தனர். தொடர்ந்து மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவ இடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். நகர்ப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நிகழ்கிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
- செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில், பழைய பல்லடம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள மின் கம்பம் பழுதடைந்து எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்தது.இதனை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இது குறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைப் படித்த மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை நட்டனர். மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- நாளை மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
- காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணி காரணமாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் உள்ள நாகை ரோடு, திருவள்ளுவர் நகர், சேவியர் நகர் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
- திருக்குவளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு நேற்றிரவு தனியார் பஸ் சென்றது.
இன்று காலை நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி சீராவட்டம் பாலம் அருகே சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை ெபய்துள்ளது.
இந்நிலையில் சீராவட்டம் பாலம் இறக்கத்தில் பஸ் சென்ற போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழந்தது.
இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டு ெவளியேற்றினர்.
இதில் பஸ்சில் பயணித்த 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர்க ளுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு கவிழ்ந்த பஸ்சை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது.
- கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், கொடிப்பங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட உள்ள சவேரியார் பட்டினம் குடியிருப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
இதனை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிங் பீட்டர் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, மின் ஊழியர் ராஜேந்திரன் தலைமையில் பணியாளர்களைக் கொண்டு மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன.
விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சீரமைத்ததற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது.
- மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர்.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பம் திடீரென வீசிய சூறாவளி காற்றினால் சரிந்தது. இது பற்றி பக்கத்தில் உள்ளவர்கள் உடனடி யாக மின்சார வாரி யத்திற்கு தகவல் கொடுத்த னர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாய்ந்து நின்ற மின் கம்பத்தை தூக்கி நிறுத்தி சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியருக்கு நன்றி கூறினர்.
- தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பெருமாள் சாமி( வயது 48), வியாபாரி. இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது. இது குறித்து மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கடந்த 11 ந் தேதியன்று வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது மின் கம்பத்தின் காரை திடீரென பெயர்ந்து பெருமாள் சாமி தலை மீது விழுந்தது. இதனால் அவரது மண்டை உடைந்தது. அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெருமாள் சாமி குடும்பத்தினர் கூறியதாவது:- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு மண்டை உடைந்து 7 தையல்கள் போட்டு, ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவானது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.
- மின் கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் மீது தாக்குதல் நடந்தது.
- 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் அருணாசலம்(வயது23). இவருக்கும் தேராபட்டியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் சம்பவத்தன்று அருணாச்ச லத்தை தனியாக அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி தேராபட்டியை சேர்ந்த நாராயணன், கிருஷ்ணசாமி, அருண், ஆனந்த், வல்லரசு, தீபா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
- பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
- சாய்ந்து விழும் அபாய நிலையில் மின் கம்பம் காணப்படுகிறது.
- அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் மின் கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.
காங்கயம் :
காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட சென்னிமலைக்கவுண்டன்வலசு பகுதியில் குடியிருப்பை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம், சாய்ந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.
பலமான காற்று வீசும் போது மின் கம்பம் சாய்ந்து வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.