என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » electrician employee
நீங்கள் தேடியது "Electrician employee"
மின்வாரிய ஊழியர் கொலை குறித்து கள்ளக்காதலியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனஹள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரலப்பா (வயது 45). உத்தனபள்ளி மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக பணியாற்றிய இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார். நேற்று காலை இவர் அங்குள்ள பாழடைந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இந்த கொலை குறித்து சூளகிரி இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சக்கரலாப்பாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சக்கரலப்பாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சக்கரலப்பாவுக்கும், அதே ஊரை சேர்ந்த விதவைப்பெண் சாக்கம்மா (45)வுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் சம்பவத்தன்று இரவு அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது கள்ளக்காதலி சாக்கம்மாவிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னிடம் சண்டை போட்டுவிட்டு அவர் வீட்டை விட்டு சென்றதாகவும், அதற்கு பிறகு நடந்த தகவல் தனக்கு தெரியாது என்றும் அவர் கூறி வருகிறார். இதனால் சக்கரலப்பா கொலையில் மர்மம் நீடிக்கிறது. அவரை கொன்றது யார்? என்று தெரியவில்லை.
இது தொடர்பாக சக்கரலப்பாவின் மனைவி, மகள், மகன் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். #tamilnews

×

X