search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electronic chip"

    • மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன
    • 1953ல் இருந்து சுமார் 300 பேர் மலையேறும் முயற்சியில் உயிரிழந்துள்ளனர்

    இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம், மவுன்ட் எவரெஸ்ட் (Mount Everest).

    இதன் உயரம் 8,849 மீட்டர் (29,032 அடி).

    மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன.

    எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொடும் சாதனைக்காக பலரும் தங்களை தயார்படுத்தி கொண்டு உயிரை பணயம் வைத்து கடினமான இந்த மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கம்.

    1953ல் இருந்து சுமார் 300 பேர் இந்த முயற்சியில் உயிரிழந்துள்ளனர்.

    எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (Everest base camp) எனப்படும் மலையடிவார தளம் 18,000 அடி உயரத்தில் உள்ளது. அங்கிருந்து மலையுச்சியை அடையும் முயற்சியில் பனிமழை, பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது மிக கடினமான செயலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், இச்சிக்கலை தவிர்க்கும் முயற்சியாக நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இது குறித்து பேசிய நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங், "எவரெஸ்ட் மலையேறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னணு "சிப்" அரசாங்கத்தால் வழங்கப்படும். இதன் மூலம் மலையுச்சியை அடையும் முயற்சி பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அவசர காலகட்டங்களில் தேடுதல் பணிகளை எளிதாக்கவும் முடியும்" என தெரிவித்தார்.

    2023ல்  ஒரு இந்தியர், ஒரு சீனர், 4 நேபாளிகள் உட்பட 12 மலையேறும் வீரர்கள் உயிரிழந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்தது.

    இந்தியாவில் கால் டிராப் பிரச்சனையை சரி செய்ய உதவும் புதிய சிப்செட்டை பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. #5G



    இந்திய டெலிகாம் சந்தையில் கால் டிராப் பிரச்சனையை சரி செய்யும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் எலெக்டிரானிக் சிப்செட்டை பெங்களூருவை சேர்ந்த சான்க்யா லேப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. கால் டிராப் பிரச்சனை மட்டுமின்றி 5ஜி இணைப்புக்களில் புதிய சிப்செட் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவீன சாதனங்களில் இதுவரை பயன்படுத்தப்படும் அனைத்துவித மின்னணு சிப்செட்களும் வெளிநாட்டு நிறுவனங்கள் உருவாக்கியவை ஆகும். இந்தியாவில் செமிகன்டக்டர் உற்பத்தி ஆலை இல்லாததே இதற்கு காரணமாக இருக்கிறது. சான்க்யா லேப்ஸ் பயன்படுத்தும் சிப்செட்களும் தென் கொரியாவில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

    புதிய சிப்செட் மொபைல் நெட்வொர்க்கில் இருந்து வீடியோ தரவுகளை பிரிக்கும் என்பதால் அழைப்பு தரம் உயரும் என சான்க்யா லேப்ஸ் நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பராக் நாயக் தெரிவித்தார். 



    சான்க்யாவின் பிரித்வி 3 சிப்செட் மொபைல் போன்களில் நேரடி வீடியோ டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்குவதோடு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சாட்டிலைட் போனாக மாற்றும் திறன் கொண்டிருக்கிறது. பிரித்வி 3 சிப்செட் வெளியீட்டு நிகழ்வில் டெலிகாம் துறை மந்திரி மனோஜ் சின்கா கலந்து கொண்டு, புதிய சிப்செட்டை அறிமுகம் செய்தார்.

    புதிய சிப்செட் சார்ந்த மொபைல் போன் உபகரணங்களை டாங்கிள் வடிவிலும் மொபைல் போன்களாகவும் அடுத்த சில ஆண்டுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என நாயக் மேலும் தெரிவித்தார்.  

    செமிகன்டக்டர் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்க சில காலம் ஆகும். உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த சிப்செட்டை அவர்கள் உருவாக்கும் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்துவர். 5ஜி சேவைகளில் எங்களது தொழில்நுட்பத்தை வழங்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம் என நாயக் தெரிவித்தார்.
    ×