search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephants strolling"

    • வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.
    • வனப்பகுதியில் உலா வந்த யானைகளால் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    கோத்தகிரி,

    காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது அனைத்துப்பகுதிகளிலும் வறட்சி காணப்படுவதால் வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி வருவது வாடிக்கையாகி விட்டது.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோத்தகிரியை அடுத்த தட்டப்பள்ளம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதியில் முகாமிட்டதுடன் அங்கு வரும் வாகனங்களை சேதபடுத்தி வந்ததால் வாகன ஓட்டிகள் அந்த பகுதிக்கு வரும்போது மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ஆனால் தற்போது குஞ்சப்பனை சோதனை சாவடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வனப்பகுதியில் புதிதாக வரத் தொடங்கியுள்ள மற்றொரு இரண்டு காட்டு யானைகள் வாகன ஓட்டிகளை மேலும் அச்சப்படுத்தி வருகிறது.

    இதில் நேற்று இரவு அந்த சாலையில் உலா வந்த யானைகளால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பின்பு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் போக்குவரத்து சீரானது.

    ×