என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » elevator electricity
நீங்கள் தேடியது "Elevator electricity"
பொன்னேரியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த இலவம்பேடு இருளர் காலனி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்கரை ஓரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ஏரிகள் என்பதால் பாம்பு மற்றும் விஷ பூச்சிகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, மின் விசிறி, செட்டாப் பாக்ஸ் போன்ற பொருட்கள் பழுதாகி விடுகின்றன.
அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளதாகவும் இதை பலமுறை மின்சார வாரியத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் ஏரிக்கரையில் உள்ள தாங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தாங்கள் இருளர் இன மக்கள் என்பதால் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். உடனே இந்த பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

×

X