என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "eliminating plastic"
- ஊட்டியில் ரூ.388.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை பார்வையிட்டனர்.
- மசினகுடியில் நடைபெறுகின்ற 150 மெகாவாட் மின் உற்பத்தி திறனை ஆய்வு செய்துள்ளோம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்களின் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில், அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), அருண்மொழி தேவன்(புவனகிரி) தமிழரசி (மானாமதுரை), வி.பி.நாகைமாலி (கீழ்வேலூர்), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்பூர்), எஸ்.ஜெயகுமார் (பெருந்துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் எஸ்.ஆர்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மின்சாரத்துறை சார்பில் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். ஊட்டியில் ரூ.388.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை பார்வையிட்டு, தேவையான அடிப்படை ஆலோசனைகளை வழங்கினர்.
மின்சாரத்துறை சார்பில் மசினகுடியில் நடைபெறுகின்ற 150 மெகாவாட் மின் உற்பத்தி திறனை ஆய்வு செய்துள்ளோம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பதவியேற்ற நாள் முதல் தேயிலை தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். தேயிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த மஞ்சப்பை திட்டத்தால் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலேயே நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி பிளாஸ்டிக் ஒழிப்பில் முதன் மாதிரியான நகராட்சியாக உள்ளது. இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பில் முதன் மாதரியான நகராட்சியாக வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து தாட்கோ துறையின் மூலம் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.4.45 லட்சம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு வாகனத்தின் சாவிகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களான பொருளாதார கடனுதவி திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் மதிப்பீட்டிற்கான 2 மகளிருக்கு தேயிலைத் தோட்டம் குத்தகை அமைக்க ஆணைகளையும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் வழங்கினார்.
கூட்டத்தில், கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனக்குழுவின் செயலாளர் டாக்டர்.கி.சீனிவாசன், இணைச்செயலாளர் பாண்டியன், மாவட்ட வன அலுவலர்கள் கவுதம்,(நீலகிரி), கொம்மு ஒம்காரம், (கூடலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரசு வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி (ஊட்டி), குந்தா புனல் மின் உற்பத்தி வட்டம் மேற்பார்வை பொறியாளர் செந்தில்ராஜ், பைக்காரா இறுதி நிலை நீா்மின் நிலையம் செயற்பொறியாளர் திரு.சசிசேகரன், ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, மசினகுடி ஊராட்சித்தலைவர் மாதேவி மோகன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் என்ற மாதன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் சுனிதா நேரு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு) மணிகண்டன், குன்னூர் டேன்சு பொது மேலாளர் ஜெயராஜ், தாட்கோ பொது மேலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்