என் மலர்
நீங்கள் தேடியது "emphasis"
- ெரயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
- திருமங்கலம் நகராட்சியில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி யில் வார்டு வாரியாக பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் -விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள வார்டுகள் 21, 21 26 மற்றும் 27 வார்டு களுக்கான பகுதி சபை கூட்டம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் ஆதவன்அதியமான் முன்னிலை வகித்தார். இதில் 4 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய டோல்கேட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அருண், திருமங்கலத்தில் பெரிய பிரச்சினையாக ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பால பணிக்காக பூமிபூஜை போடப்பட்டது. அதன்பின் பணிகள் தொடங்கவில்லை. விதிமுறை மீறி கப்பலூர் டோல்கேட் அமைந்துள்ளது இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் கூறுகையில், ெரயில்வே மேம்பால பணிகள் குறித்து தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்கும். கப்பலூர் டோல்கேட் பிரச்சினை தொடர்பாக நாங்கள் பதவிக்கு வந்தவுடன் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
தற்போது டோல்கேட் எதிர்ப்புக்குழுவினர் முதல்வரை சந்திக்க வேண்டும். எங்களிடம் வழங்கிய கடிதத்தினை முதல்வருக்கு அனுப்பி உள்ளோம். தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் விரைவில் முதல்வரை இது தொடர்பாக சந்திக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றனர்.
கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, வினோத், ரவி, ராஜகுரு, முத்துகாமாட்சி, சாலிகாஉல்பத் ஜெய்லானி, ரம்ஜான்பேகம் ஜாகீர், பகுதி சபை செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
- ரெயில்வேயை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
திருவாரூர், நாகப்பட்டினம் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் ரெயில்வே துறையை கண்டித்து போராட்டத்தை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
செல்வராஜ் எம்.பி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூருக்கு சரியான சாலை வசதி இல்லாததால் தரை வழிப் போக்குவரத்து சவாலாக உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகம் செயலிழந்துள்ளதால் நீர்வழிப் போக்குவரத்தும் இல்லை.
இந்தப்பகுதியில் விமான நிலையம் இல்லாததால் வான்வழிப் போக்குவரத்தும் இல்லை. ரயில் பயணம் மட்டுமே வாய்ப்பாக உள்ளது. நம்முடைய கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
ஒன்றிய அரசு எதையும் கேட்டவுடன் தந்து விடாது. போராடித்தான் பெற வேண்டும். எனவே ரயில்வேயை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும்.
அதற்கு முன்பு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அவர் மூலம் ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு நாகை எம்.எல்.ஏ பேசினார்
கூட்டத்தில், எம்.எல்.ஏ, .க்கள் பூண்டி கே.கலைவாணன் நாகை மாலி, மாரிமுத்து, தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
- இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
திருவாரூர்:
தமிழ்நாடு தொடக்கப்ப ள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் திருவாரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் முடிவின்படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
கல்வி நலன் மாணவர் நலன் ஆசிரியர் நலன் இவைகளுக்கு எதிரான மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையினை கைவிட்டு, அந்தந்த மாநில கல்விக் கொள்கைகளின் படி கற்பித்தல் பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும்.
ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்ப டுத்த வேண்டும்.
இதற்கு ரிய நிதியினையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
இவைகள் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மத்திய அரசு கல்வியினை மாநில அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
- ஆனால் அதற்கான நிதி உதவி இல்லை. இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நிர்வாகிகள் கென்னடி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஆனால் அதற்கான நிதி உதவி இல்லை. இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நிர்வாகிகள் கென்னடி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து அறநிலையத்துறை அலுவ லகத்துக்கு சென்ற கென்னடி எம்.எல்.ஏ. அறநிலை யத்துறை ஆணையர் சிவசங்கர், கோவில் மேலாளர் அண்ணாமலை, ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று நிதி அளிப்பதற்கான ஆவணங்களை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நிதி உதவியினை வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலுக்கு வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.
இதில் கலியமூர்த்தி,ஊர் பஞ்சாயத்தாரர்கள், தொகுதி செயலாளர் சக்திவேல், கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கி யராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ரவிக்குமார், இளைஞர் அணி பஸ்கள், கவி, அரவிந்த், ரகுராமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு கணிப்பாய்வு அலுவலர் வலியுறுத்தினார்.
- தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ள ப்பட்டு வருகின்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இதில் அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டி பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விவசாய பணிகள் தற்போது தொடங்கியு ள்ளதை முன்னிட்டு தேவை யான உரங்கள், விதைகள் இருப்பு உள்ளது. அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பயனா ளிகளுக்கு முழுமையாக கிடைத்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து திம்மநாதபுரம், கடலாடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது
- லோக் ஜனசக்தி தமிழ் மாநில தலைவர் தெரிவித்தார்
திருச்சி:
லோக் ஜனசக்தி கட்சியின் தமிழ் மாநில தலைவர் வித்யாதரன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இப்போது அவர் கூறியதாவது,
இந்திய நாடாளுமன்றத்தில் 40 ஆண்டு காலம் எம்.பி.யாக, மத்திய மந்திரியாக இருந்து பல்வேறு சாதனைகள் செய்த மறைந்த சமூக நீதி காவலர் ராம் விலாஸ் பசுவானுக்கு தமிழ்நாட்டில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க தமிழக முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மாயமாக்கப்படும் சூழலில் தனியார் நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
எல்லா மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில ஒன்றிய அரசு கல்வியை ஒன்றிய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதில் ஒன்றிய அரசு தமது பிடியை தளர்த்த வேண்டும் என்றார்.
பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியம், மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், நம்பியார், சுந்தரவடிவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- காரைக்குடி-தூத்துக்குடி ரெயில் பாதையை செயல்படுத்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.
- வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.
சாயல்குடி
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனியிடம் பொது நலகமிட்டி தலைவர் பரமஞானம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுசாமி, வேம்பார் ஒன்றிய கவுன்சிலர் செல்வமணி, செல்லப்பாண்டி, நரிப்பை யூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, வேம்பார், தருவைகுளம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது வரை அந்த பணிக்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்த பகுதியில் ரெயில்வே பாதை அமையப்பெற்றால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவதாக நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.
- பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தினார்.
- இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல் படுத்தப்பட உள்ளது.
விருதுநகர்
தமிழகத்தில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பாதுகாத்தல் மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றில் மிகுந்த முக்கியத்துவத்தை முதல்-அமைச்சர் அளித்து வருகிறார். முதல் கட்டமாக பழைய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை தனியார் நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் சேகரித்து தமிழ்நாடு ஆவண காப்பகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்று மதிப்புமிக்க பதிவுகள் நமது செழுமையான தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாற்றும் விதமாக தனி நபர்களிடமிருக்கும் இத்தகைய பதிவுகளை சரிசெய்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் செயல்முறைகள் செயல்படுத்தப்பட உள்ளது.
கலாசாரம் மற்றும் பராம்பரியத்தின் பெரிய தடயங்களை கால மாறுதல்கள் மற்றும் மனித அலட்சியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தனி யார்களிடம் உள்ள பதிவேடு களின் தேசிய பதிவேட்டில் இணைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. பதிவுகள் மேற்கொள்ளும் பொருட்டு கோவை, சேலம், திருச்சி ராப்பள்ளி, கடலூர், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் மாவட்ட பதிவு அலுவலகங்கள் செயல்பட உள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தினரிடமோ மற்றும் தனி நபர்களிடமோ பழமையான மற்றும் வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் ஏதேனும் இருப்பின் அப்பதிவுகளை மாவட்ட கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்கள் 04562-252601, 252602, 252603-மற்றும் 9445008161 ஆகியவற்றின் மூலம் மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியா ளரை (பொது) தொடர்பு கொண்டும் அல்லது அவர்களை நேரில் தொடர்பு கொண்டு தெரி விக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்கு மார் ஊர் பெரியோர்களுடன் சந்தித்தார்.
- அப்போது முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் அதிக தாது உப்புக்கள் கலந்துள்ளது.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்கு மார் ஊர் பெரியோர்களுடன் சந்தித்தார். அப்போது முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் அதிக தாது உப்புக்கள் கலந்துள்ளது. சாதாரணமாக குடிநீரில் 50 முதல் 150 றி.டி.எஸ். அளவுள்ள குடிநீரை பருகுவது மட்டுமே நமது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது.
அதே குடிநீரில் றி.டி.எஸ். 1,000-க்கு மேல் இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்று புகார் தெரிவித்தார். மேலும் முத்தியால்பேட்டை தொகுதி காட்டாமணி குப்பம் குடிநீர் மேல்நிலைத்தேக்க தொட்டிக்கு 6 இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீரில் அதிக அளவு உப்பு உள்ளது. இந்த குடிநீர் முத்தியால்பேட்டை சோலை நகர், வ.உ.சி.நகர், மஞ்சினி நகர், அங்காளம்மன் நகர், விஸ்வநாதன்நகர் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே , முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரை மாற்றி, குறைந்த தாது உப்புத்தன்மையுடைய, மக்களுக்கு பாதுகாப்பான தரமான குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
- விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
- விவசாயிகளுடைய பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகில் உள்ள திருமண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 24-வது நாள் தொடர் போராட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க.காசிநாதன் தலைமையிலும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன் முன்னிலையிலும் நடைபெற்றது.
விவசாயிகள் தினத்தை முன்னிட்டு கரும்பு விவசாயிகள் தேசிய கொடியை கையில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:-
கரும்பு விவசாயிகள் போராட்டம் 24 நாட்களைக் கடந்தும் நடந்து வரும் வேளையில் மத்திய,மாநில அரசுகள் கவலை கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இந்த ஆலையை நிர்வகித்து வந்த திருவாரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் கால்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆலையை விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை பட்டுவாடா செய்யாமல் விற்று இருக்கிறார்.
இந்த ஆலையை புதிதாக வாங்கிய நிறுவனமும் இவர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய சுமார் 100 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு வருகிற இத்தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி வருவது வருத்தம் அளிக்கிறது.
கரும்பு விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் மோசடியாக கடன் பெற்று இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக ஆலை முதலாளிகள், வங்கி நிர்வாகத்தினர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். மேலும் உடனடியாக உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும்.
விவசாயிகளுடைய பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும். ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெறவேண்டிய தொகையைப் பெற்று கரும்பு விவசாயிகளின் பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாதவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா, உழவர் உரிமை இயக்க தஞ்சை மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் தமிழ் வேந்தன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தமிழ் மாறன், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஹென்றிதாஸ், குடவாசல் ஒன்றிய செயலாளர் சாலமன், குடந்தை ஒன்றிய முன்னணி பொறுப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- வீரவள்ளி, வாணரப்பேட்டை , திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை.
- இதனால் அப் பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாக் கீரப்பா ளையம், நேதாஜிநகர், உடையார் தோட்டம், பெரிய பள்ளி, வீரவள்ளி, வாணரப்பேட்டை , திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் அப் பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் சமூக விரோதிகள் சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடு கின்றனர். ஆகையால் அப் பகுதியில் மின் விளக்குகள் அமைத்து அதற்கான சுவிட்சை அங்காளம்மன் கோவில் தெருவில் வைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. மின் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று நகர செயற்பொறியாளர் கனிய முதனிடம் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சாலையில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும், ஹைமாஸ் விளக்குகளையும் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து உடனடியாக நடவடி க்கைகள் மேற்கொண்டு மின் விளக்குகளை சீரமை ப்பதாக செயற்பொறி யாளர் உறுதி அளித்தார். அப்போது தி.மு.க. மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவரணி விநாயகம், லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.
- துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை.
- இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
திருவாரூர்:
நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
நன்னிலம் சட்டமன்ற தொகுதி வலங்கைமான் ஒன்றியம் விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான நிலத்தையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கியுள்ளனர்.
நிலம் தேர்வு குறித்து உரிய அதிகாரிகளும் ஆய்வு செய்து விட்டனர்.
கடந்த ஆண்டு துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என மின்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால் பணிகள் நடைபெறவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இரா.காமராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் 5.35 கோடி அளவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.