search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee account"

    சேலத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.14 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். அப்போது, அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீடு எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து ரூ.14 ஆயிரம் மாயமாகிவிட்டதாகவும், அதை எடுத்த மர்மஆசாமியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி ஒரு புகார் மனுவை அளித்தார். மேலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியதாவது:-

    சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டியிருப்பதால் உங்களது ஏ.டி.எம்.கார்டு ரகசிய எண்ணை தெரிவிக்குமாறும் கூறினார். நானும் வங்கியில் இருந்து பேசுவதாக நம்பி ரகசிய எண்ணை தெரிவித்தேன்.

    அதன்பிறகு பணம் தேவைப்பட்டதால் ஏ.டி.எம்.மையத்திற்கு சென்றேன். ஆனால் எனது வங்கி கணக்கில் இருந்து 14 ஆயிரம் ரூபாய் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று விசாரித்தபோது, வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்தார்கள். அப்போது தான், செல்போனில் பேசிய மர்மநபர், வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி ஏ.டி.எம்.கார்டு ரகசிய குறியீடு எண்ணை பெற்று பணத்தை எடுத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவர் யார்? என்று தெரியாது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட அந்த மர்ம ஆசாமியின் செல்போன் நம்பரை வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அந்த நபருக்கு இந்த பெண்ணின் செல்போன் நம்பர் எப்படி தெரியும்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×