என் மலர்
நீங்கள் தேடியது "Employees"
- வக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 180 வக்பு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு மானிய விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள், அடக்க தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் மானிய விலையில் 125 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணி புரியும் உலமா நலவாரிய உறுப்பி னர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உறுப்பினர் செயலர் கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பின ராகவும் மற்றும் மாவட்ட வக்பு வாரிய கண்காணிப் பாளர் உறுப்பினராகவும் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும்.
மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரி டம் பெற்ற சான்று, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் வைத்திருக்க வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கு வக்பு கண்காணிப்பாளரின் சான்று மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
- அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர். இதனிடையே ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆத்தூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 30 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- பொங்கல் போனஸ் ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.
- தகுதி உள்ள சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு அரசு ஊழியர் விழிப்புணர்வு பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத்தலைவர் கலைவாணன் தலைமை வகித்தார்.
வட்டசெயலாளர் பாலு வரவேற்றார்.
இணை செயலாளர் முருகவேல், முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கே.மாரிமுத்து கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவேண்டும், பொங்கல் போனசை ௧௦ ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், தகுதியுள்ள சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
முடிவில் வட்டபொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.
- நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
- ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியம் ரூ. 4000 வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் செயல்படும் அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
ஐ.என்.டி.யூ.சி பொதுசெயலாளர் இளவரி தலைமை வகித்தார்.
ஏ.ஜ.டி.யூ.சி சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், சி. ஐ. டி .யூ சங்க மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், பாட்டாளி சங்க தலைவர் முருகன், அம்பேத்கர் தொழிற்சங்க மாநிலத் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியும் ரூ. 4000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள், சேமிப்பு நிலையங்கள், நவீன அரிசி ஆலைகள் முன்பு வருகின்ற 9-ந்தேதி ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் தரக் கட்டுப்பாடு மேலாளர் ஓய்வு வேணுகோபாலன், அன்பழகன், சிவானந்தம், மணியரசன், புவனேஸ் வரன், பாண்டியன், பழனிவேல், ராஜ்குமார், மணிமாறன், அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏஐடியூசி மாநில பொருளாளர் கோவிந்த ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.
- சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் தலைமை வகித்தார். இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, துாய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைப்பு அரசாணை எண்.139-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.
- ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
- இறந்த சாலை பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் வெங்கடேசன், சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சட்டையப்பன், மத்திய செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சட்ட மன்றத்தில் அறிவிப்போம் என வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர் அதை அமல்படுத்த வேண்டும்.
இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். 50-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்களை பலி கொண்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7500க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் வட்டத் தலைவர் கருணாகரன் கண்ணன் காமராஜ் கலைவாணன் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொரு–ளாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.
- கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும்.
- வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
திருப்பூர் :
வருவாய்த்துறையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும் , உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பதவி இறக்கம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பதவி உயர்வு ஆணை களை விரைந்து வழங்கிட வேண்டும், வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வருவாய் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய் துறை ஊழியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூரிலும் வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக திருப்பூரில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் இல்லாமல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
- பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மதுரை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியு றுத்தி வந்தனர். இது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர் பாக எந்த அறி விப்பும் வெளியாகவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகம், சுகாதார போக்குவரத்து பணிமனை முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன், கல்யாண சுந்தரம், மணிகண்டன், பரஞ்சோதி, ராமசந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தேர்தல் வாக்கு றுதியின்படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
- தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலை நிறுத்தம் காரணமாக கலெக்டர் அலுவலக வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரை
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடந்தது.
இதன் காரணமாக மதுரை கலெக்டர் அலுவலகம், திருப்பரங்குன்றம், மேலூர், உசிலம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பட்டா மாறுதல், சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் மூர்த்தி பேசுகை யில், மதுரை மாவட்டத்தில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
அரசு எங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிடில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- முருங்கை சாகுபடி மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் குறித்து பேசினார்.
- துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொத்தங்குடியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதித்திட்டத்தின்கீழ் முருங்கை தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதில், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உயர்ரக விளைச்சல் திறன் கொண்ட ஆண்டுதோறும் காய்ப்புத்திறன் கொண்ட 200 முருங்கை கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சிமன்ற தலைவர் அமராவதிராமலிங்கம் தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜ்குமார், மாவட்ட வள பயிற்றுநர் நிறுவன மேம்பாட்டு பாலமுருகன், முன்னோடி விவசாயி பாலசுப்ரமணியன், குத்தாலம் ஒன்றிய மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ஐசிஐசிஐ பவுண்டேஷன் வளர்ச்சி அலுவலர் உஷா திட்ட விளக்கவுரையாற்றி முருங்கை தோட்டம் அமைப்பதன் குறிக்கோள்கள் குறித்தும், முருங்கை சாகுபடியின் மூலம் கிடைக்க க்கூடிய வருமானம் குறித்தும், இத்தோட்டத்தினை மகளிர் குழுவினர் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதனை குறித்து விளக்கி பேசினார்.
இதில், ஒருங்கி ணைந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருத்திகா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் மனுநீதிசோழன், கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் மற்றும் ஐசிஐசிஐ பவுண்டே ஷன் சிவான ந்தம் உள்ளிட்ட நிறுவன களப்பணியாளர்கள், கொத்தங்குடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- செவிலியர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
- செக்யூரிட்டிகள் மற்றும் நோயாளிகளும் முககவசம் அணிந்து வர வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இன்று முதல் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் அறிவித்தார்.
அதன்படி இன்று தஞ்சைராசாமி ராசுதார் அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வரும் மருத்து வர்கள், செவிலி யர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர்.
மேலும் மருத்துவமனை பணியாளர்கள், செக்யூரிட்டிகள் மற்றும் நோயாளிகளும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று மருத்துவமனை நிலைய அதிகாரி டாக்டர் செல்வம் அறிவுறுத்தினார்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.
- காலையில் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை வழங்கப்பட–வில்லை.
- மதிய உணவிற்காக எந்த வித தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் டி.
மணல்மேடு அங்கன்வாடி மையத்தில் கடந்த 12-ந்தேதி மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டர்.
ஆய்வின் போது டி. மணல்மேடு குழந்தைகள் மைய பணியாளர் ரமா மற்றும் உதவியாளர்லதா ஆகியோர் பணியில் மெத்த னமாக இருந்துள்ளனர்.
உணவு பொருட்கள் பூச்சி மற்றும் வண்டுகள் இல்லாமல் பாதுகாக்கப்படவில்லை.
பதிவேடுகள் பராமரிக்கப்ப டவில்லை. காலையில் கொழுக்க ட்டை வழங்கப்பட– வில்லை. மதிய உணவிற்காக எந்த வித தயாரிப்பு பணி களும் மேற்கொள்ளவில்லை என்று ஆய்வின் போது தெரியவந்துள்ளது.
எனவே பணியில்குறைபாடுகள் காரணமாக டி. மணல்மேடு குழந்தைகள் மைய பணியாளர் ரமா மற்றும் குழந்தைகள் மைய உதவியாளர் லதா ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.