என் மலர்
நீங்கள் தேடியது "Employment"
- 42 ேபருக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
- தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.
தரங்கம்பாடி:
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஊக்குவித்து வருகிறார். படித்த இளைஞர்களை, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.149 கோடி மானியத்துடன் 929 திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களால் இறுதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4151 பயனாளிகளுக்கு ரூ.41 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது:-
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்று சொல்லக்கூடிய இந்த திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டு 42 நபர்களுக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
2022-2023-ம் ஆண்டிற்கு 1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத மானியத்துடன் 53 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 55 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டத்தில் பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட பயனாளிகள் தங்களது கருத்துகளை கூறிய விவரம் வருமாறு:-
என்னுடைய பெயர் கார்குழலி. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசித்து வருகிறேன்.
நான் இளநிலை வணிகவியல் பட்டதாரி ஆவேன். நான் வேலைக்கு செல்லாமல் சொந்தமாக தொழில் ஆரம்பித்து வளர வேண்டும் என முனைப்புடன் இருந்தேன்.
அந்த சமயத்தில் கலெக்டரின் மாவட்ட தொழில் மையத்தில் தமிழக அரசின் திட்டங்களை பற்றி செய்தி தாளில் வெளியிடப்பட்ட விளம்பர செய்தியை பார்த்து, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன்.
அதன் பிறகு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில் தொடங்க விண்ணப்பித்தேன்.
எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 53.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.10.09 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் பேங்க் ஆப் இந்தியா வங்கி மயிலாடுதுறை கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.
தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.
இது போன்ற திட்டங்களின் வாயிலாக படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை காக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
குத்தாலத்தை சேர்ந்த சிவபாரதி கூறும்போது, நான் ஒரு பொறியியல் பட்டதாரி. சொந்தமாக தொழில் தொடங்கி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என உறுதியுடன் இருந்தேன்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் உரிய பரிசீலனைக்கு பின் எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 136.14 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.38.44 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் சிட்டி யூனியன் வங்கி குத்தாலம் கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.
தற்போது எனது வாழ்வாதாரம் உயர்ந்து, வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். முதலமைச்சருக்கு எனது நன்றி என்றார்.
- சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது.
- தொழிற்பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பை அளிப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சி வழங்குவது நிலையான வருமானம் ஈட்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தேவையான திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுவதற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்கள் விண்ணப்பம் பெற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண் 303, மூன்றாவது தளம் என்ற முகவரியில் பெற்று 31.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
- மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் மாரிமுத்து எம்.எல்.ஏ.விடம் அளித்துள்ள மனுவில்,
எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதில் மாநிலத் உப தலைவர் செல்வராஜ், காளிமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் ,மண்ணை கோட்ட செயலாளர் தம்பு சாமி, திட்ட அமைப்பு செயலாளர் சுப்பையன், இயேசு ராஜன் ,ஒப்பந்த தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடனிருந்தனர்.
- தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
- 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைஅளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெற்று கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.
- கணினி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணிணி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கணிணிப் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.
பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்.
மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகில் ஈஸ்வர் நகர், 4 பக்கிரிசாமி தெருவில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் வந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் பெற 04362-242377 என்ற தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணிணி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெ றலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.
- விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் பெண்களுக்காக ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.
இவர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
நாளை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்காணல் நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 8110919990, 9442557037 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம்.
- பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிா் தனியாா் நிறுவனத்தில் பணியில் சேருவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியன சாா்பில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.
இதற்கான வேலைவாய்ப்பு முகாம் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 26-ந்தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் நடைபெறுகிறது.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 22 வயதுக்கு உள்பட்ட மகளிா் தங்களது மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
- 15 புதிய வண்ணங்களில் சேலைகளும், வேட்டியில் ஒரு அங்குலத்தில் கரையும் உற்பத்தி செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விசைத்தறி வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், திருப்பூா், கோவை, ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரகங்கள் இடம் பெற்றிருந்தன. இக்கூட்டத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது:- பொங்கல்வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்குத் தேவையான 177 லட்சம் வேட்டிகள், 177 லட்சம் சேலைகளில் இதுவரை 50 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2023 ஜனவரி 10-ந் தேதிக்குள் மீதமுள்ள வேட்டி, சேலைகளை போா்க்கால அடிப்படையில் உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளில் மாறுதல் செய்யப்பட்டு தற்போது 15 புதிய வண்ணங்களில் சேலைகளும், வேட்டியில் ஒரு அங்குலத்தில் கரையும் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஒரு லட்சம் கைத்தறி, விசைத்தறி நெசவாளா்கள் 6 மாதத்துக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இத்திட்டத்தின் மூலமாக உபதொழில்களில் 50 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா்.
இதைத்தொடா்ந்து திருப்பூா் சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க நெசவாளா்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின்கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கடனுதவிகளையும், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து 60 வயது பூா்த்தியடைந்த கைத்தறி நெசவாளா்களுக்கு முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் அமைச்சா் வழங்கினாா்.
கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலா் (கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த் துறை)தா்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித் துறை ஆணையா் த.பொ.ராஜேஷ், துணிநூல் துறை ஆணையா் மு.வள்ளலாா், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- மதுரையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- வேலை நாடுநர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
மதுரை
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.
வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
- அங்கு மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. கல்லூரியின் முதல்வராக பங்காரு (பொறுப்பு) இருந்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் அரசியல் கட்சியினர் அவரைப் பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், கல்லூரி முதல்வர் பங்காருவை உயர்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
- தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.
- 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,933 தொழிலாளா்களுக்கு ரூ.63.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:- தமிழகத்தில் தற்போது வரையில் 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1.12 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்தப்பட்டு முகாமில் அதிக அளவாக 75 ஆயிரம் இளைஞா்கள் பங்கேற்றனா். இதில், 7,852 பேருக்கு அன்றைய தினமே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக ஒசூரில் நடைபெற்ற முகாமில் 25 ஆயிரம் போ் பங்கேற்ற நிலையில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. உதகையில் நடைபெற்ற முகாமில் குறைந்த அளவாக 5 ஆயிரம் போ் மட்டுமே பங்கேற்ற நிலையில் 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. திருப்பூரில் வரும் 2023 ம் ஆண்டில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சம் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றாா். இதுதொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு இயக்குநா் கோ.வீரராகவ ராவ், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் வாரியத் தலைவா் பொன்குமாா், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- மாணவிகளுக்கான தட்டச்சுப் பயிற்சி கூடத்தை துணைவேந்தர் சந்திரசேகர் பார்வையிட்டார்.
- கல்லூரி நிர்வாகம் திறம்பட செயல்படுவதாக கல்லூரி முதல்வரை துணைவேந்தர் பாராட்டினார்.
சங்கரன்கோவில்:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் சங்கரன்கோவில் மனோ கல்லூரி உட்பட 6 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் சங்கரன்கோவில் நடுவக் குறிச்சியில் அமைந்துள்ள மனோ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதிர் வரவேற்றார்.
கல்லூரியில் உள்ள வகுப்பறைகள், பேராசிரியர்கள் அறை, அலுவலக அறை, கம்ப்யூட்டர் சோதனைக் கூடம், தட்டச்சுப் பயிற்சி கூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிக ளையும் தற்போது மாணவ-மாணவிகள் பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வு எழுதி வரும் அறைகளையும் பார்வையிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி வளாகத்தில் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த மாணவிகளுக்கான தட்டச்சுப் பயிற்சி கூடத்தைப் பார்வையிட்ட துணைவேந்தர், பட்டப் படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி மாணவிகளுக்கு தனித் திறமையை வளர்க்கவும், உடனடி வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரவும் உதவும் என கருத்துத் தெரிவித்தார்.
கல்லூரி வளாகம் தூய்மையாக உள்ளது எனவும் கல்லூரி நிர்வாகம் திறம்பட செயல்படுகிறது எனவும் கல்லூரி முதல்வரை துணைவேந்தர் பாராட்டினார்.
ஆய்வின் போது கணினி அறிவியல் துறைத் தலைவர் குருநாதன், வணிகவியல் துறைப் பேராசிரியர் முருகேசன் அலுவலக ஊழி யர்கள் முத்துமாரி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.