என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ending Ceremony"
- இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா பரமன்குறிச்சி அருகே குருநாதபுரத்தில் நடைபெற்றது.
- சமய வகுப்புகளில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிகள், ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி, இந்து அன்னையர் முன்னணி சார்பில் 25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா பரமன்குறிச்சி அருகே குருநாதபுரத்தில் நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளரும், மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளருமான கேசவன் தலைமை தாங்கினார். இந்து அன்னையர் முன்னணியின் மாவட்ட தலைவி சந்தனக்கனி, மாவட்ட செயலர் சொர்ணசுந்தரி, பரமன்குறிச்சி நகர செயலர் லட்சுமணன், பா.ஜனதா விவசாய அணி பொதுச்செயலர் வரதன், வார்டு உறுப்பினர் வாசகி, உடன்குடி நகர இந்து முன்னணி செயலர் ஆத்திசெல்வம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்து ஒற்றுமை, இந்துக்களின் சமய சடங்குகள் அன்றாட நடைமுறைகளில் அறிவியல், பாரத நாட்டின் பழம் பெருமைகள் குறித்து இந்து அன்னையர் முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாயக்கூத்தன், இந்து முன்னணி மாநில பொதுச்செயலர் அரசு ராஜா ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து இந்து சமய வகுப்புகளில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிகள், ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் கலைராணி, பத்திரசீதா, அனிதா, சந்திரா, ஷிபா, இசக்கியம்மாள், இசக்கி கனி, பாரதி, கோபிகா, தங்கசெல்வி, முத்துலட்சுமி, சுயம்புக்கனி, சரஸ்வதி, தமிழரசி, செல்வி, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, ஆனந்தி, பட்டுரோஜா, முத்துகனி, வனசுந்தரி, முருகன், பால்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறை சார்ந்த மாஸ், மின்னணு தகவல் தொடர்பு துறை சார்ந்த ஸ்பேஸ் சங்கங்களின் நிறைவு விழா நடந்தது.
- மாஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறை சார்ந்த மாஸ், மின்னணு தகவல் தொடர்பு துறை சார்ந்த ஸ்பேஸ் சங்கங்களின் நிறைவு விழா நடந்தது.
மாஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கேட் டைம் ஹேக்கர், அட்டை கலை, புதுமை கருத்து ஹேக்கத்தான், திட்ட யோசனைகள் போட்டி, பலூன் கார், மூளையதிர்ச்சி தொழில்நுட்பங்கள், குழு விவாதம், வேலைவாய்ப்பு பற்றிய அமர்வு மற்றும் ஸ்பேஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட உலகளாவிய வளர்ச்சிக்கான படைப்பாற்றல் கண்டுபிடிப்புகளில் மின்னணுவியல், செல்போன் சேவை–யில் திறன் அபிவிருத்தி திட்டம், சைபர் பாதுகாப்பு அடிப்படை விழிப்புணர்வு, மைண்ட் ஸ்கிராம்பில், டெக் இன்டலெக்ட், டாகில் மைண்ட்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை, சான்றிதழை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழங்கினார். இதில் துறைத்தலைவர்கள், சங்கங்களின் பொறுப்பு பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்