என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "engineer murder"
- கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர்:
கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரில் வசித்து வந்தவர் உமேந்தர்(வயது33). சாப்ட்வேர் என்ஜினீயர்.
இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் உமேந்தர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். மாலையில் அவர்கள் மாமல்லபுரம் சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஓலா அப் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.
வணிக வளாகம் முன்பு கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ரவியை கைது செய்தனர்.
இவரது சொந்த ஊர் சேலம் ஆத்தூர் ஆகும். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
உமேந்தர் தன்னுடன் வந்த மனைவியின் அக்காள் தேவிப்பிரியாவின் செல்போனில் இருந்து காரை முன்பதிவு செய்து இருந்தார். காரில் அனைவரும் ஏறியதும் டிரைவர் ரவி ஓ.டி.பி எண்ணை கேட்டு அவசரப்படுத்தினார்.
அப்போது உமேந்தர் தனது செல்போனில் ஓ.டி.பி எண்ணை தேடி தடுமாறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த டிரைவர் ரவி கடுமையான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் சவாரியை கேன்சல் செய்யும்படி கூறிவிட்டு காரில் இருந்து இறங்கினர். அப்போது காரின் கதவை உமேந்தர் வேகமாக மூடியதாக கூறப்படுகிறது.
இதனால் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உமேந்தர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலால் தாக்க முயன்றபோது தடுத்த டிரைவர் ரவி தனது கையில் இருந்த செல்போனால் அவரது தலையில் காது ஓரத்தில் பலமாக குத்தினார்.
இதில் நிலைகுலைந்த உமேந்தர் கீழே விழுந்ததும் அவரது மார்பில் பலமுறை எட்டி உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த உமேந்தர் இறந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
மனைவி, குழந்தைகள் கண்முன்பே உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதனை கண்டு அவர்கள் துடித்து போய் உள்ளனர்.
சாதாரண வாக்குவாதத்தில் ஆத்திரம் கண்ணை மறைத்ததால் இந்த கொலை நடந்து உள்ளது. இதனால் என்ஜினீயரின் குடும்பமே நிலைகுலைந்து போய் இருக்கிறது.
- தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதில் ஏறினர்.
- அப்போது டிரைவரான ரவி ‘ஓ.டி.பி.’ எண்ணை கேட்டார். இதில் உமேந்தருக்கும் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்போரூர்:
கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரை சேர்ந்தவர் உமேந்தர் (வயது 33). சாப்ட்வேர் என்ஜினீயர். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உமேந்தர் வார இறுதி நாட்களில் கோவையில் இருந்து வருவது வழக்கம்.
நேற்று காலை உமேந்தர் தனது குடும்பத்துடன் வாடகை காரில் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவர்களுடன் உறவினரான தேவிபிரியாவும் சென்று இருந்தார். அவர்கள் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பொழுது போக்கு மையத்தில் இருக்கும் தியேட்டரில் படம் பார்த்தனர். பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.
தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதில் ஏறினர். அப்போது டிரைவரான ரவி 'ஓ.டி.பி.' எண்ணை கேட்டார். இதில் உமேந்தருக்கும் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த உமேந்தரும், அவரது குடும்பத்தினரும் காரை விட்டு இறங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் ரவி சரமாரியாக உமேந்தரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் உயிருக்கு போராடிய உமேந்தரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உமேந்தர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கார் டிரைவர் ரவியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. குடும்பத்தினர் முன்பே என்ஜினீயர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் டம்டம் பாறை மலைப்பகுதியில் கடந்த 18-ந் தேதி அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
தேவதானப்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு தேவதானப்பட்டி சுடுகாட்டில் புதைத்தனர்.
இதனிடையே கர்நாடக மாநிலம் மங்களூரு போலீசார் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் டம்டம் பாறை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் முகமதுசமீர் (வயது32) என தெரிய வந்தது.
இவர் அரபு நாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரதோஷ் என்பருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
கடந்த மாதம் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு தனது மனைவியை பார்க்க முகமதுசமீர் வந்துள்ளார். அதன்பிறகு கொடைக்கானல் சுற்றுலா வந்தபோது கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
முகமதுசமீர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் 6 மாதத்திற்கு ஒருமுறை தனது மனைவியை பார்க்க வருவது வழக்கம். ஆனால் மாதம்தோறும் அவர்களது செலவுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.
இதனிடையே பிரதோஷ் என்பவருக்கும் மங்களூருரை சேர்ந்த கார் டிரைவர் முகமதுயாசிக் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பிரதோஷ், முகமது யாசிக்குடன் சேர்ந்து வாழ விரும்பினார். இதற்கு கணவர் இடையூறாக இருக்கலாம் என நினைத்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதனை தனது கள்ளக்காதலன் முகமது யாசிக்கிடம் தெரிவித்தார். அதன்படி அவர்கள் கொடைக்கானல் செல்ல முடிவு செய்தனர்.
தனது கள்ளக்காதலனையே கார் டிரைவராக பிரதோஷ் ஏற்பாடு செய்தார். இதனை அறியாத முகமதுசமீர் மனைவி மற்றும் குழந்தையுடன் கொடைக்கானல் வந்தார். டம்டம் பாறை அருகே வந்தபோது மனைவி பிரதோஷ் மற்றும் முகமதுயாசிக் ஆகிய 2 பேரும் என்ஜினீயர் முகமதுசமீரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
பட்டறைப்பாறை என்ற இடத்தில் அவரது உடலை தூக்கி வீசினர். அதன்பிறகு கடந்த 17-ந் தேதி பிரதோஷ் மட்டும் தனது குழந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சமீர் எங்கே என்று கேட்டபோது அவர் தனது நண்பருடன் சேலத்திற்கு சென்று விட்டதாக கூறி உள்ளார்.
மேலும் வீட்டில் இருந்த 60 பவுன் நகையை எடுத்துக் கொண்டு பிரதோஷ் தலைமறைவானார்.
இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டு முகமதுசமீர் இறந்ததாக செய்தி வெளியானபோது அது குறித்து எவ்வித பதட்டமும் இல்லாமல் பிரதோஷ் இருந்ததால் அவரே கொலை செய்தது உறுதியாகி உள்ளது.
பெங்களூரில் இருந்து முகமதுசமீரின் உறவினர்கள் தேவதானப்பட்டி வந்தனர். அவர்கள் தங்களது மத வழக்கப்படி முகமதுசமீர் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். எனவே உடலை தரும்படி கேட்டனர்.
இதனையடுத்து முகமது சமீர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டு பெரியகுளம் தாசில்தார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் சமீரின் மனைவியையும் கார் டிரைவரையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது செல்போன்கள் கடந்த 18-ந் தேதி முதல் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரியில் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். இதனால் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த மாதம் சென்னை திருவான்மியூரை சேர்ந்த நடிகை விஷ்ணுபிரியாவின் கள்ளக்காதலன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மதுரையை சேர்ந்த வாலிபர் கள்ளக்காதல் பிரச்சினையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.
தற்போது அதேபோல 3-வது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதனால் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்