search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eroe News"

    • மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் சஷ்டியையொட்டி சூரசம்காரம் விழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி எனும் முருகப்பெருமானுக்கு தினந்தோறும் பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் பெண்கள் விரதமிருந்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான், வீரபாகு, சூரன் ஆகியோர் சப்பரத்தில் சத்தி சாலை மாரியம்மன் கோவில் வழியாக வந்து பவானிசாகர் சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று முருகப்பெருமான் வீரபாகு உடன் சேர்ந்து முதலில் கஜமுகனை வதம் செய்தார்.

    இதையடுத்து 2-வதாக வானு கோவணை வதம் செய்தார். 3-வதாக சிங்க மகனை வதம் செய்து 4-வதாக கோவில் வளாகத்தில் சராகா சூரனை வதம் செய்துவிட்டு வான வேடி க்கைகளுடன் முருகப்பெரு மான் சிவபெருமானுக்கு சிவ பூஜைகள் செய்து முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். இதை தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா விழா கடந்த 14-ந் தேதி காலை தொடங்கியது.

    அன்று காலை 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவில் இருந்து முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது அதன் பிறகு காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது.

    11 மணிக்கு மகா பூர்ணாகுதியும் 11.30 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடை பெற்றது. தொடந்து பகல் 12 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு வள்ளி தெய்வானை க்கு அபிஷேம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து நேற்று மதியம் வரை 5 நாட்களும் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்பு நேற்று மதியம் 2 மணிக்கு மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.

    இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச் சாரியார் முருகப்பெரு மானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேல்லினை ஒப்படைத்தார்.

    அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெருமான் சமேதராக மலை அடிவார த்தில் எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடி க்கை மற்றும் சிறப்பு மேள தாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா தொடங்கியது.

    சென்னிமலை டவுன், நான்கு ராஜா வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் நிகழ்சி யை ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபத்தியுடன் கண்டு களித்தனர்.

    இதில் மேற்கு ராஜா வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ராஜா வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ராஜா வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெரு மான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்சியும் நடந்தது.

    அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளினார். அதை தொடந்து இன்று காலை 10.30 மணிக்கு முருகப்பெரு மான் தெய்வானையை மணம் செய்யும் திருமண விழா நடைபெற்றது.

    கந்த சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    • காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே ஆசனூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் விசாரணையில் காரில் வந்த 2 பேர் ஈரோடு சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சந்திரசேகர் (வயது 38), சரவணன் என்பதும்,

    அதிலிருந்த மது பாக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரபட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 144 மது பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடிவேல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
    • நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள புதுசூரிபாளையம் ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் வடிவேல் (25). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக வடிவேல் தனது மனைவியுடன் சண்டையிட்டு தென்னை மரத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

    இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த வடிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென், வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நெல் உற்பத்தியாகிறது.
    • நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.

    ஈரோடு, நவ. 19-

    கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி நெல்லு க்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 150 ரூபாய் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. பல ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு விலையை உயர்த்தி உள்ளது.

    இதை விவசாயிகள் வரவேற்கிறோம். ஆனால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    வட மாநிலங்களில் மட்டும் கோதுமை அதிகமாக விளைகிறது. இதனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வடமாநில விவசாயிகளுக்கு மட்டும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது.

    தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நெல் உற்பத்தியாகிறது.

    எனவே தென் மாநில விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.

    அத்துடன் 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டம், விவசாய பணிகளுக்கும், பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மாற்றி அமைத்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

    விவசாய பணிக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு வேளாண் பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றி செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    • அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவ தால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 725 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று 1,500 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1,800 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி, நல்லூர் பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது பு.புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளி சாணார்பதி அருகே ஒரு பகுதியில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (60) என்பதும், அவர் அந்த பகுதியில் முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மறைத்து வைத்து இருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குழி பகுதியை சேர்ந்தவர் யாசிக் (வயது 36). இவர் கோவை பிரிவு ரோட்டில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து கொண்டு கடையை வீட்டி விட்டு சென்று விட்டார்.

    மறுநாள் காலை பேக்கரி கடையை திறக்க வந்தார். அபபோது கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் கடை உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைத்து இருந்து ரூ.45 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து யாசிக் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×