என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Erudku Bus Stand"
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூன் 11,12-ந்தேதிகளில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
- அண்ணா பூங்கா வளாகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார்.
சேலம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூன் 11,12-ந்தேதிகளில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் வரும் அவர் அன்று சேலம், அண்ணா பூங்கா வளாகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார். பின்னர் சேலம், பழைய பேருந்து நிலையத்தினை பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.
மேலும், இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டத்தி னைத் தொடங்கி வைத்து, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 1 லட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அரசு அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற உள்ளது.
பின்னர், 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கி றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரு கைக்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று ஆய்வு செய்தார். விழா நடைபெற உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தையும் அவர் பார்வையிட்டார்.
ஈரடுக்கு பேருந்து நிலையம்
சேலம் மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் சேலம் பழைய பஸ் நிலையப் பகுதியில் ரூ.97 கோடி மதிப்பில் ஈரடுக்கு பஸ் நிலையம் பிர மாண்டமாக கட்டப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்த பஸ் நிலை யத்தை வருகிற 11-ந் தேதி மாலை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
இதையொட்டி ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு இன்று ஆய்வு செய்தார். அப்போது தரைதளம் மற்றும் முதல் தளம் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்ட அவர் தொடர்ந்து பஸ் நிலையத்தில் மின்விளக்கு கள் அமைக்கும் பணி களையும், சுத்தப்படுத்தும் பணிகளையும் துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளின் போது கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர் பார்த்திபன் எம்.பி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பொறுப்பு அசோக் குமார், கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் டி.எம் செல்வகணபதி, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார், உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்ட தலைவர் ராஜ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்