search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Executive Council Meeting"

    • தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல் பா.ஜனதா நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் முத்தையாபுரம் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் மைதானத்தில் நடைபெற்றது.
    • தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டல் பா.ஜனதா நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் முத்தையாபுரம் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் மைதானத்தில் நடைபெற்றது. தெற்கு மண்டல் தலைவர் மாதவன் தலைமை தாங்கினார்.

    விளையாட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் சிறப்புரையாற்றினார். மண்டல் துணை தலைவர்கள் ராமஜோதி, அருண்பாபு செல்வம், பொது செயலாளர்கள் மகேஷ், பிரபு, மண்டல் செயலாளர்கள் பாலகுமார், மலர்செல்வி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பா.ஜ.க. ஆன்மிக பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், மண்டல் பொறுப்பாளர்களை ஆய்வு செய்தபின் கிளை தலைவர்களை அவர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசானமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், ஜெயராம், முருகன், மண்டல் பொருளாளர் முத்துராஜ், உள்ளாட்சி அமைப்பு பிரிவு மாவட்ட செயலாளர் முத்து பெரியநாயகம், அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் புனிதா, பட்டியல் அணி மாவட்ட செயலாளர் அலெக்ஸ் பாண்டியன், சேகர், தூர்க்கையப்பன், செல்வி, மணிகண்டன், சங்கர் மற்றும் கிளை தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மனித நேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர் தொகுதியை ஒதுக்குமாறு நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க அயராது பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

    கடந்த 2016 சட்டமன்றத்தேர்தலின் போது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட ஆம்பூர் தொகுதியை ம.ம.க.விற்கு ஒதுக்குமாறு தி.மு.க. தலைமையை கேட்டுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. #tamilnews
    ×